சி.எஸ்.கே பிளேயிங் லெவனில் 8 ஆவது இடம் வழங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் – ஜடேஜாவின் செம ரிப்ளை

Jadeja
- Advertisement -

சென்னை அணியின் முதல் தேர்வாக 16 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா இந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று பேசப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நட்சத்திர ஆல்ரவுண்டராக சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா இந்த சீசனில் முதல் நபராக சென்னை அணியால் தக்க வைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து தோனி, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தக்க வைக்கப் பட்டாலும் ஜடேஜாவை முதன்மை வீரராக சென்னை அணியில் இருக்கிறார்.

அந்த அளவிற்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா சென்னை அணியின் முக்கிய தூணாக பார்க்கப்படுகிறார். தோனி தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவருக்கு அடுத்து சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது தங்களது ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் குறித்து ஒரு கேள்வி ஒன்றினை தமிழ் ரசிகர்களுக்காக எழுப்பி இருந்தது. அதில் ஆடும் பிளேயிங் லெவன் பட்டியலை வெளியிட்டு இருந்த ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனமானது துவக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் பெயரையும், மூன்றாவது இடத்தில் மொயின் அலியின் பெயரையும் பதிவிட்டிருந்தது.

மேலும் 7-வது இடத்தில் தோனியின் பெயரையும், 8-வது இடத்தில் ஜடேஜாவின் பெயரை பதிவுசெய்து இருந்தது. மீதமுள்ள இடங்கள் காலியாக இருந்தன. மேலும் இந்த இடங்களுக்கெல்லாம் யாரை தேர்வு செய்கிறீர்கள் என்பது போன்று ஸ்டார்ஸ்போர்ட்ஸ் குழுமம் அந்த ட்விட்டர் பதிவில் ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியது.

- Advertisement -

இதையும் படிங்க : பாண்டிங் என்னிடம் கூறிய இந்த வார்த்தைகள் தான் என்ன ஊக்கப்படுத்தின – ஆவேஷ் கான் ஓபன்டாக்

இந்நிலையில் அந்த பிளேயிங் லெவன் பட்டியலில் 8-ஆம் இடத்தை கண்ட ரவீந்திர ஜடேஜா செய்துள்ள ரிப்ளே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அந்த பதிவிற்கு பதிலளித்த ஜடேஜா 8-வது இடம் எதுக்கு? எனக்கு 11-ஆவது இடத்தை கொடுங்கள் என்று பதில் அளித்து சிரிக்கும் இமோஜியையும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement