கொல்கத்தா அணியின் தோல்விக்கு அவர்கள் செய்த் இந்த தவறே காரணம் – நேற்றைய போட்டியில் இதை கவனித்தீர்களா ?

Morgan
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியானது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.

miller

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்விக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் மந்தமான பேட்டிங்கே காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி போட்டியின் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது என்று நினைத்து மிகவும் பொறுமையாக ஆடியது. குறிப்பாக அடித்து ஆடவேண்டிய முதல் 6 ஓவர் பவர் ப்ளேவில் அந்த அணி அடித்தது வெறும் 25 ரன்கள் மட்டுமே.

ஆனால் சுப்மன் கில்லின் விக்கெட்டை மட்டுமே பறிகொடுத்திருந்தது. பவர் பிளே முடிந்ததும் கைவசம் 9 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையிலும் அந்த அணியின் ஆட்டக்காரர்கள் அடித்தாடும் மனநிலைக்கு வரவில்லை. மிகவும் மந்தமாக விளையாடிய அந்த அணியின் வீரர்களால் 10 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடி காட்டாமல் இப்படி மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களால் ஆட்டத்தின் முழு அழுத்தமும் பின் வந்த அதிரடி ஆட்டக்காரர்களான ஆண்ட்ரு ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் மேல் விழுந்தது.

அதிரடியாக ஆட வேண்டுமென்ற கட்டாயத்தினால் அவர்களும் ரிஷ்க்கான ஷாட்களை ஆடினர்.
ஆனால் அவர்களாலும் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா அணி இதற்கு முந்தைய போட்டியில் சென்னை அணியிடம் பவர்ப்ளேவிலேயே 5 விக்கெட்டகளை இழந்து தடுமாறியது. ஆனால் அப்போட்டியில் கடைசியில் வந்த வீரர்களான ஆண்ட்ரு ரஸல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர்.

rana

எனவே இந்தப் போட்டியில் தொடக்க விக்கெட்டுகளை அவ்வளவு எளிதில் விட்டுவிடக்கூடாது என்று நினைத்து நிறைய பந்துகளை வீணாக்கியதால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. தொடக்கத்திலேயே யாரேனும் ஒரு வீரர் அதிரடியாக ஆடியிருந்தால், அந்த அணியானது 160 என்ற ஃபைட்டிங் டார்கெட்டையாவது செட் செய்திருக்கும்.

Advertisement