சி.எஸ்.கே அணியை வீழ்த்த காத்திருக்கும் கொல்கத்தா அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

KKR
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 38-வது போட்டி இன்று மதியம் அபுதாபி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றத்தை அடையும் என்பதினால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள சென்னை அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுவதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

cskvskkr

- Advertisement -

மேலும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணியானது தற்போது இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி வருவதால் அந்த வெற்றியை தொடர விரும்பும். ஏற்கனவே தற்போது நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேவேளையில் சென்னை அணியும் சிறப்பாக செயல்படுவதால் இந்த போட்டியில் யார் ? வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடைசியாக இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளதால் அதே அணியுடன் தான் விளையாடும். அதன்படி இன்றைய போட்டிக்கான கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவன் இதோ :

kkr

1) சுப்மன் கில், 2) வெங்கடேஷ் ஐயர், 3) ராகுல் த்ரிப்பாதி, 4) நிதிஷ் ராணா, 5) இயான் மோர்கன், 6) தினேஷ் கார்த்திக், 7) ஆண்ட்ரே ரசல், 8) சுனில் நரேன், 9) லாக்கி பெர்குசன், 10) வருண் சக்ரவர்த்தி, 11) பிரசித் கிருஷ்ணா

Advertisement