ஐ.பி.எல் தொடரில் விளையாட இந்தியா வந்து ஒரு போட்டியில் கூட விளையாடாத நியூசி வீரருக்கு – கொரோனா உறுதி

KKR

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது சிறப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் கொல்கத்தா அணியின் வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக முதலில் ஒரு போட்டி தடைப்பட்டது பின்னர் சிஎஸ்கே அணியில் மூவர், சன்ரைசர்ஸ் அணியில் ஒருவர் மற்றும் டெல்லி அணியில் ஒருவர் என வீரர்களிடையே தொற்று பரவ ஆரம்பித்ததால் இந்த நடப்பு ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்தது.

sandeep

மேலும் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து செப்டம்பரில் இந்த தொடரை மீண்டும் துவங்கலாம் என்று திட்டமிட்டு இந்த தொடரில் பங்கேற்று இருந்த வீரர்கள், ஊழியர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் அம்பயர்கள் என அனைவரையும் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணியை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த நியூசிலாந்து வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி நியூசிலாந்து வீரரான டிம் சைபர்ட் தற்போது நியூசிலாந்து செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளார். மேலும் மிதமான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்த அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொல்கத்தா அணிக்காக அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரை அவர் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Seifert

மேலும் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்த இவருக்கு ஏற்பட்ட இந்த தொற்றினால் நாடு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை நினைத்து ரசிகர்கள் தற்போது வருத்தப்பட்டு உள்ளனர். மேலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசி சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே இவரும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Seifert 1

அவரைத்தவிர ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மற்ற நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன், ஜேமிசன், சாண்ட்னர் ஆகியோர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக 11ஆம் தேதி இங்கிலாந்து செல்ல தயாராக உள்ளனர் எனவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement