தினேஷ் கார்த்திக்கு பாதி பொறுப்புகளே வழங்கப்படும். மீதி கேப்டன்ஷிப் இவருக்கு கொடுக்கப்படும் – கே.கே.ஆர் நிர்வாகம்

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அதிலும் இந்திய இளம் வீரர்கள் பலர் இருக்கின்றனர் ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, சுப்மன் கில் என பல திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். தற்போது 21 வயதாகும் சுப்மன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் உண்மையில் ஒரு தொடக்க வீரர் ஆவார். இவருக்கு 21 வயது தான் ஆகிறது.

Karthik

- Advertisement -

சென்ற வருட ஐபிஎல் தொடரில் இவர் ஐந்தாவது இடத்தில் இறக்கி விடப்பட்டார். மேலும் சென்ற வருடம் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதற்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் தான் காரணம் என்று ஒருபக்கம் ஒரு கருத்து இருந்து வருகிறது.

இந்நிலையில் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு தலைமை பொறுப்பு செய்வதற்கான ஒரு சில பணிகள் வழங்கப்படும் என்று கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் : சுப்மன் கில் மிகவும் திறமையான சிறந்த இளம் வீரர் அவரிடம் குறைந்தபட்சம் ஒரு சில தலைமைப் பொறுப்புகளை கொடுக்கப் போகிறோம் என்று மெக்கல்லம் கூறியுள்ளார். அவர் கூறியதை பார்க்கும்போது ஒரு சில போட்டிகளில் அணிகளை வழிநடத்தும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிகிறது.

Gill 3

அவர் இளம் வீரராக இருந்தால் கூட நீண்ட நாட்கள் அணியில் இருந்தால்தான் கேப்டனாக முடியும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை . ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அந்தப் பண்புகள் அவரிடம் இருக்கிறது.

gill

இந்த தொடர் முழுவதும் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் ஒரு சில பொறுப்புகளை அவரிடம் வழங்க இருக்கிறோம். அதேபோல் தினேஷ் கார்த்திக் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் களில் ஒருவர் . அவர் கேப்டனாகவும், முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என்றும் மெக்கல்லம் கூறியுள்ளார்.

Advertisement