- Advertisement -
ஐ.பி.எல்

இவர்தான் கேப்டன், இவர்தான் துணைக்கேப்டன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட – கே.கே.ஆர் நிர்வாகம்

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 ஐ.பி.எல் சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. அதனை தொடர்ந்து 18-வது ஐபிஎல் சீசனானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கே.கே.ஆர் அணி கைப்பற்றியிருந்தது.

கேப்டனை அறிவித்த கொல்கத்தா அணியின் நிர்வாகம் :

இந்த தொடருக்கு முன்னதாக பத்து அணிகள் பங்கேற்ற மெகா ஏலத்தில் பல்வேறு வீரர்களின் அணிமாற்றம் நிகந்துள்ளதால் இந்த ஆண்டு எந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

எதிர்வரும் இந்த பதினெட்டாவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியாக மார்ச் 22-ஆம் தேதி நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தங்களது சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் பத்து அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அனைத்து அணி நிர்வாகங்களும் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன.

இந்நிலையில் கொல்கத்தா அணி சார்பாக தங்களது புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் கொல்கத்தா அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பில் :

- Advertisement -

அனுபவ வீரரான அஜின்க்யா ரகானே இந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் இளம் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர் அந்த அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அதிகாரவூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அந்த ஒரு பவுலரை சமாளிச்சுட்டா போதும்.. ஆஸிக்கு எதிராக கோலி சதமடிச்சு ஜெயிக்க வைப்பாரு.. ராயுடு ஆதரவு

தற்போது 36 வயதான ரகானே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அணியின் இணைந்து விளையாடிய வேளையில் மீண்டும் தனது சிறப்பான பார்மை வெளிப்படுத்தியதால் அவருடைய அனுபவத்தை கணக்கில் கொண்டு இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வழிநடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -