அந்த ஒரு பவுலரை சமாளிச்சுட்டா போதும்.. ஆஸிக்கு எதிராக கோலி சதமடிச்சு ஜெயிக்க வைப்பாரு.. ராயுடு ஆதரவு

Ambati Rayudu
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களதுப் போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்த இந்தியா தங்களது லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா தங்களது அரை இறுதிப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை மார்ச் 4ஆம் தேதி எதிர்கொள்கிறது.

ஐசிசி தொடர்களின் வரலாற்றில் எப்போதுமே வலுவான அணியாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. சமீபத்திய டெஸ்ட் தொடரிலும் இந்தியாவை 10 வருடம் கழித்து தோற்கடித்த ஆஸ்திரேலியா இம்முறையும் பெரிய சவாலைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அது போன்ற சவாலை சமாளித்து இந்தியா வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அசத்துவது அவசியமாகிறது.

- Advertisement -

சவாலான ஜாம்பா:

இந்நிலையில் இந்த செமி ஃபைனலில் விராட் கோலிக்கு சுழலுக்கு சாதகமான துபாயில் ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா சவால் கொடுப்பார் என்று அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார். அதை சமாளித்து விட்டால் விராட் கோலி சதத்தை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைக்க வாய்ப்புள்ளதாகவும் ராயுடு கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இது விராட் கோலி – ஆடம் ஜாம்பாவுக்கு இடையேயான போட்டியாக செல்லும். சமீப காலங்களில் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் தடுமாறியுள்ளார். ஆனால் இந்தத் தொடரில் இருக்கும் ஃபார்ம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரை நன்றாக அழைத்துச் செல்லும். வெற்றி நோக்கத்துடன் விளையாடும் அவர் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது”

- Advertisement -

ராயுடு ஆதரவு:

“அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பசியுடன் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற கவனம் விராட் கோலியின் கண்களில் இருப்பதை உங்களால் பார்க்க முடியும். பெரியப் போட்டிகளில் பொதுவாக விராட் கோலி சவால்களை சமாளித்து கொண்டாடக்கூடிய தருணங்களை கொடுக்கக் கூடியவர். துரதிஷ்டவசமாக நியூசிலாந்துக்கு எதிராக கிளன் பிலிப்ஸ் நம்ப முடியாத கேட்ச் பிடித்ததால் அவர் ஆட்டமிழந்தார்”

இதையும் படிங்க: துபாய் இந்தியாவின் சொந்த ஊர் இல்ல.. செமி ஃபைனலில் எங்களுக்கே அது கேள்விக்குறி தான்.. ரோஹித் பதிலடி

“அது அவர் பக்கம் அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நாள். இருப்பினும் தனது பசியை செமி ஃபைனலில் விராட் கோலி பெரிய ரன்களாக அடிபார் என்று நம்பலாம். அவருக்கு நமது முழுமையான ஆதரவு இருக்கிறது” என்று கூறினார். இங்கே 2017 முதல் ஆடம் ஜாம்பாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 5 முறை அவுட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement