மும்பை, சென்னை அணிகளை அடுத்து ஐ.பி.எல் வரலாற்றில் சிறப்பான சாதனையை படைத்த கொல்கத்தா – விவரம் இதோ

Shakib

ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஆணியும் மோதின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார். அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் குவித்தது.

rana

அதிகபட்சமாக தொடக்க வீரரான ராணா 80 ரன்களும், திரிப்பாதி 53 ரன்களையும் குவித்தனர். அதன் பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து சஹா மற்றும் வார்னர் ஆகியோரது விக்கெட்டை இழந்தது பின்னர் மணிஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தாலும் இறுதி நேரத்தில் அவர்களால் இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் அவர்கள் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற வெற்றி அந்த அணியின் நூறாவது வெற்றியாக அமைந்துள்ளது.

kkr

இதுவரை 193 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 100வது வெற்றியை பெற்று சாதனை செய்துள்ளது. இதில் 99 வெற்றிகளை நேரடியாகவும் ஒரு வெற்றியை சூப்பர் ஓவர் மூலம் கொல்கத்தா அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் நூறு வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாக கொல்கத்தா சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன்னர் மும்பை அணி 118 ஆட்டங்களிலும் அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 106 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அதிக வெற்றிகளை பெற்ற அணிகளாக இந்தப் பட்டியலில் முதலிரு இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது