கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்த ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. ஏற்கனவே 2 கோப்பைகளை வென்று கொடுத்த கௌதம் கம்பீர் இந்த வருடம் கொல்கத்தா அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றார். அவருடைய வழிகாட்டுதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பெற்ற அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
அதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதன் பின் மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் அதே ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்து. குறிப்பாக அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதெராபாத் முதலில் பேட்டிங் செய்தது.
3 முத்தான சாதனை:
அப்போது வழக்கம் போல கொல்கத்தா அணியை அடித்து நொறுக்கி ஹைதராபாத் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபாரமாக பந்து வீசிய கொல்கத்தா அந்த அணியை வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் இறுதிப் போட்டியில் எதிரணியை ஆல் அவுட்டாக்கிய முதல் அணி என்ற சரித்திர சாதனையை கொல்கத்தா படைத்தது.
இதற்கு முன் நடைபெற்ற 16 ஐபிஎல் தொடர்களின் இறுதிப் போட்டியில் தலா 5 கோப்பைகளை வென்ற சென்னை, மும்பை போன்ற அணிகள் கூட எதிரணியை ஆல் அவுட்டாக்கியதில்லை. அதிகபட்சமாக 2013 ஐபிஎல் ஃபைனலில் சென்னை அணியை மும்பை அணி 125/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். அதைத்தொடர்ந்து 114 ரன்கள் இலக்கை 10.3 ஓவரிலேயே சேசிங் செய்த கொல்கத்தா 57 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் இறுதிப் போட்டியில் அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் கொல்கத்தா படைத்துள்ளது. இதற்கு முன் 2022 ஐபிஎல் ஃபைனலில் ராஜஸ்தானுக்கு எதிராக 131 ரன்கள் இலக்கை குஜராத் அணி 11 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றதே முந்தைய சாதனையாகும். இது போக லீக் சுற்றின் முடிவில் 14 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்ற கொல்கத்தா வெறும் 3 தோல்விகளை மட்டுமே பதிவு செய்தது.
இதையும் படிங்க: ஆர்சிபி ஜெயிக்க.. அவங்களுக்கு வழிவிட்டு விராட் கோலி தனது தரத்தை குறைச்சுக்கனும்.. ராயுடு புதிய கருத்து
2 மழையால் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் குவாலிபயர் 1 மற்றும் ஃபைனல் போட்டியில் வென்ற கொல்கத்தா கோப்பையை வென்றது. அந்த வகையில் இந்த வருடம் கொல்கத்தா வெறும் 3 தோல்வியை மட்டுமே சந்தித்து கோப்பையை வென்றது. இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் குறைந்த தோல்வியை பதிவு செய்த அணி என்ற ராஜஸ்தானின் சாதனையை கொல்கத்தா சமன் செய்தது. இதற்கு முன் 2008 சீசனில் 3 தோல்வியை மட்டுமே சந்தித்த ராஜஸ்தான் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.



