IPL 2023 : பெங்களூருவை சுழலில் சுருட்டிய கொல்கத்தா, சிஎஸ்கே’வின் 11 வருட சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை

RCB vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் பெங்களூருவை 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (44) ரன்கள் எடுத்தாலும் எதிர்ப்புறம் வெங்கடேஷ் ஐயர் 3, மந்திப் சிங் 0, கேப்டன் நித்திஷ் ராணா 1, ஆண்ட்ரே ரசல் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

Shardhul Thakur

- Advertisement -

அதனால் 89/5 என தடுமாறிய அந்த அணி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது களமிறங்கிய ஷார்துல் தாக்கூர் யாருமே எதிர்பாராத வகையில் சரவெடியாக பேட்டிங் செய்து வெறும் 20 பந்துகளில் தன்னுடைய முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து அற்புதமாக பேட்டிங் செய்தார். அவருடன் 6வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரிங்கு சிங் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 3 சிக்சருடன் 46 (33) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் சிம்ம சொப்பனமாக செயல்பட்ட தாகூர் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 68 (29) ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் கொல்கத்தா 204/7 ரன்கள் எடுத்தது.

சுழலில் மாயஜாலம்:
ஆனால் கடைசி 8 ஓவரில் ரங்களை வாரி வழங்கிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 205 என்ற கடினமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த விராட் கோலி 21 (18) ரன்களில் சுனில் நரேன் சுழலில் போல்டானார். அவருடன் மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் டு பிளேஸிஸை 23 (12) ரன்களில் தனது மாயாஜாலத்தில் போல்டாக்கிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 5, ஹர்ஷல் பட்டியல் 0 என முக்கிய பேட்ஸ்மேன்களையும் ஒற்றை இலக்க ரன்களில் போல்டாக்கினார்.

KKR

போதாக்குறைக்கு தினேஷ் கார்த்திக் 9, அனுஜ் ராவத் 1, கரண் சர்மா 1 என இதர லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அறிமுகப் போட்டியில் ஜாலம் நிகழ்த்திய சூயஸ் சர்மாவின் சுழலில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றனர். இறுதியில் டேவிட் வில்லி 20* (20), ஆகாஷ் தீப் 17 (8) ரன்கள் எடுத்தும் 17.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு 123 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. குறிப்பாக முதல் போட்டியில் வெற்றிகரமான மும்பையை அதிரடியாக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி இப்போட்டியில் மொத்தமாக சொதப்பி தோற்றதால் உண்மையான பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -

மறுபுறம் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகள், சூயஸ் சர்மா, 3 விக்கெட்டுகள், சுனில் நரேன் 2 விக்கெட்டுகள் என கொல்கத்தாவின் 3 சுழல் பந்து வீச்சாளர்கள் சேர்ந்து தங்களது மாயாஜால சுழலில் பெங்களூருவை சிக்க வைத்து மொத்தமாக 9 விக்கெட்டுகளை சாய்த்து பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் சுழல் பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை எடுத்த அணி என்ற சென்னையின் 11 வருட சாதனையை தகர்த்த கொல்கத்தா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Suyash Sharma

இதையும் படிங்க:IPL 2023 : இவருக்கு எப்டி 110 மேட்ச் சான்ஸ் கிடைச்சுது? டிகே, ரோஹித்தை மிஞ்சிய இந்திய வீரர் மோசமான சாதனை – ரசிகர்கள் விளாசல்

இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை ஒரு இன்னிங்ஸில் ஸ்பின்னர்கள் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த பட்டியல்:
1. 9 விக்கெட்கள் : கொல்கத்தா – பெங்களூருக்கு எதிராக, கொல்கத்தா, 2023*
2. 8 விக்கெட்கள் : சென்னை – டெல்லிக்கு எதிராக, விசாகப்பட்டினம், 2012
3. 8 விக்கெட்டுகள் : சென்னை – பெங்களூருக்கு எதிராக, சென்னை, 2019
4. 8 விக்கெட்கள் : சென்னை – டெல்லிக்கு எதிராக, சென்னை, 2019

Advertisement