அதிகவிலைக்கு போவார் என்று நெஹ்ராவால் கணிக்கப்பட்ட ஷாகிப் அல் ஹசன் – எந்த அணிக்கு தேர்வானார் தெரியுமா ?

Nehra-2

ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்றது. 292 வீரர்கள் ஏலம் விட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தென்ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. அதற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. அடுத்தப்படியாக கிளென் மேக்ஸ்வெல் 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் இவரையும் ஆர்சிபி அணியே வாங்கியது.

Morris

ஆஸ்திரேலியாவின் ஜய் ரிச்சர்ட்சன் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அதேபோல் ரிலே மெரிடித்தை 8 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக கிருஷ்ணப்பாக கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. மேலும் மொயின் அலியை 7 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை 5.25 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது.

சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்களில் இந்த இருவரும்தான் அதிக விளைக்குப் ஏலம் போனார்கள். ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் ஆகியோர் முதல் சுற்றில் ஏலம் போகவில்லை. அதன்பின் அடிப்படை விலையில் எடுக்கப்பட்டார்கள். ஹர்பஜனை கேகேஆர் அணியும், ஜாதவை எஸ்ஆர்ஹச் அணியும் வாங்கின.ஏலத்தின் கடைசி நபராக கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார்.

arjun tendulkar

அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் ஏலமும் முடிவடைந்தது. இன்று மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள். இதில் 22 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். 8 அணிகளும் மொத்தமாக 145 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.

- Advertisement -

shakib

இந்நிலையில் இந்த ஐ.பி.எல் ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போவார் என்று நெஹ்ராவால் கணிக்கப்பட்டவர் யாரெனில் ஷாகிப் அல் ஹசன். ஆனால் அவர் அடிப்படை விலையான 1 கோடியில் ஆரம்பித்து இறுதியில் 3.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.