ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் இந்தியாவுக்காக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சுமாராக விளையாடிய அவர் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இருப்பினும் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் அவர் 13 போட்டிகளில் 6 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். எனவே தமக்கு மிகவும் பிடித்த ஆஸ்திரேலியாவில் இம்முறை விராட் கோலி அசத்துவார் என்பதை பல முன்னாள் வீரர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மா சொந்தக் காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3வது இடத்தில் விராட்:
அதே போல சுப்மன் கில் பயிற்சியின் போது காயத்தை சந்தித்ததால் முதல் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலியை 3வது இடத்தில் களமிறக்கலாம் என்று 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவது சிறந்த முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் 3 விதமான கிரிக்கெட்டிலும் 3வது இடத்தில் நல்ல ரன்கள் குவித்துள்ளார். உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன் எப்போதும் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும். அந்த இடத்தில் உங்களுடைய சிறந்த வீரர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அதற்காக கேள்விகள் எழலாம்”
வித்யாசமான ஆலோசனை:
“ஒருவேளை அவர் அங்கே ஒரு சில இன்னிங்ஸ் அல்லது ஓரிரு தொடர்களில் சிறப்பாக விளையாடாமல் போகலாம். ஆனால் நாட்டுக்காக சிறப்பாக விளையாடியுள்ள விராட் கோலி நிச்சயம் அந்த இடத்தில் மீண்டும் சிறப்பாக விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். எனவே அவர் ஃபார்முக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விராட் கோலி எப்போதும் சவாலை எதிர்கொள்ளக் கூடியவர்”
இதையும் படிங்க: 13 போட்டியில் 6 சதம்.. விராட் கோலியிடம் இதை செய்யாதீங்க.. ஆஸியை எச்சரித்த மைக்கேல் கிளார்க்
“ஆஸ்திரேலியாவில் அந்த சவால் கடினமாக இருந்தாலும் அதை விராட் கோலி விரும்புவார்” என்று கூறினார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை வெறும் 167 ரன்களை 23.85 என்ற சராசரியில் எடுத்து சுமாராகவே விளையாடியுள்ளார். இருப்பினும் அனுபவமிக்க விராட் கோலி அந்த இடத்தில் அசத்துவார் என்று கீர்த்தி ஆசாத் நம்பிக்கை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் கூட முதல் போட்டியில் தடுமாறிய விராட் கோலி பின்னர் 70 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.



