இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. 1992க்குப்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல இந்திய அணி ஆஸ்திரேலியாலில் வெல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதே போல இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பதால் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி தம்முடைய தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் இந்தியாவை சாய்க்க சுமாரான ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை அட்டாக் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணிக்கு கிளன் மெக்ராத் போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள்.
15 போட்டியில் 6 சதம்:
இந்த சூழ்நிலையில் விராட் கோலியை ஆஸ்திரேலிய அணியினர் ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய அணியினர் அந்த சில்லித்தனமான விஷயத்தை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அதையே விராட் கோலி விரும்புவார். அவர் தன்னுடன் சண்டையிட விரும்புவார்”
“அவருக்கு நீங்கள் ஸ்லெட்ஜிங் வாய்ப்பு வழங்கக்கூடாது. அதை ஆஸ்திரேலிய அணியினரும் அறிவார்கள் என்று நம்புகிறேன். இதுவரை இங்கே விளையாடி சாதித்தற்காக அவரை இங்குள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள். இம்முறையும் அவர் பேட்டிங் செய்வதை நான் விரும்புகிறேன். ஒருவேளை இந்த தொடரை இந்தியா வெல்ல வேண்டுமெனில் விராட் கோலி அதிகப்படியான ரன்கள் குவிக்க வேண்டும்”
விராட் கோலி அசத்தனும்:
“ஆஸ்திரேலியாவில் விராட் கோலி 13 போட்டிகளில் 6 சதங்கள் அடித்து வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். இப்போதும் அதே ஆட்டத்தை கொண்டுள்ள அவர் இங்குள்ள சூழ்நிலைகளை நன்கு தெரிந்தவர் என்பதால் ரன்கள் குவிப்பதற்கான பசியை கொண்டிருப்பார். இந்தியா வெல்ல வேண்டுமெனில் இந்தத் தொடரில் அவர் நிறைய ரன்கள் குவிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்ற முறையில் அவர் அமைதியுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க: கருணையே இல்லாம அந்த 2 இடத்தை அடிங்க.. விராட் கோலியை சாய்க்க இயன் ஹீலி கொடுத்த பிளான்
“ஒருவேளை முதல் போட்டியில் நல்ல ரன்கள் குவித்தால் இந்த தொடர் முழுவதும் அவருக்கு சிறப்பாக அமையும். அவர் எப்போதும் களத்தில் விருப்பத்துடன் சண்டையிட விரும்புவார். இந்த தொடரில் அவரைச் சுற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகிறது. அதுவே சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை அவருக்கு கொடுக்கும்” என்று கூறினார். அத்துடன் முதல் போட்டியில் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விலகுவது தவறான முடிவல்ல என்றும் மைக்கேல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.



