நடந்து வரும் ஐ.பி.எல் 11 ஆம் சீசனில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடிவருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்தில இருக்கிறது. இந்நிலையில் அந்தஅணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவிற்கும் அந்த அணியின் ஆலோசகரான இந்திய முன்னாள் கிரிக்கெட்டர் ஷேவாகிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை இளக்காக நிர்னையித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணமே அந்த அணியின் கேப்டன் அஸ்வின் 3 வது பேட்டிங் வரிசையில் கருண், மனோஜ் திவாரியை இறக்காமல் அஸ்வின் களமிறங்கிது தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா அஸ்வினி எதற்கு 3 வது பேட்டிங் வரிசையில் களமிறக்கினீர்கள் என்று பஞ்சாப் அணியின் ஆலோசகராக உள்ள ஷேவாகிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் சேவாக், பிரீத்தி ஜிந்தா மீது கடும் கோவத்தில் உள்ளாராம்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்று கூறப்படும் சிலர் கூறுகையில் ” நடிகை ப்ரீத்தி ஜிந்தா, சேவாக்கை ஆடும் லெவனை தேர்ந்தெடுப்பத அடிக்கடி குறை கூறி வருகிறார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுவது சகஜம். இது முதல் முறையல்ல” என்று தெரிவித்துள்ளனர்.ப்ரீத்தி ஜிந்தாவுடன் அடிக்கடி இதுபோன்ற மோதல்கள் ஏற்படுவதால் பஞ்சாப் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து ஷேவாக் வெளியேற இருக்கிறார் என்று ஒரு சில பேச்சுகளும் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவி வருகிறது.