வெல் பிளேயிடு ஸ்டார் பாய்.. பிரின்ஸ் சுப்மன் கில்லை வாழ்த்திய கிங் கோலி – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

Kohli and Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இந்திய அணியானது போட்டியின் ஐந்தாம் நாளான இன்று வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. அப்படி வெற்றிபெறும் பட்சத்தில் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரும் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலைக்கு வரும்.

பிரின்ஸ் கில்லை பாராட்டிய கிங் கோலி :

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 587 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களையும் குவித்தது. அதே வேளையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி தற்போது இரண்டாவது இன்னிங்சில் 608 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்கினை நோக்கி விளையாடி வந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் நான்காம் நாளான நேற்று ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 72 ரன்களை குவித்திருந்ததால் இன்னும் 536 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சின் போது 387 பந்துகளை சந்தித்து 30 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 269 ரன்களை குவித்தார். அதுமட்டும் இன்றி இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 161 ரன்களை குவித்தார்.

- Advertisement -

இப்படி முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தகர்த்த வேளையில் அவருக்கான பாராட்டுகளும் அனைவரது மத்தியிலும் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அனுபவ வீரரான விராட் கோலியும் தனது பாராட்டுகளை சமூக வலைதளம் வாயிலாக சுப்மன் கில்லுக்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சுப்மன் கில்லை கிங் கோலி பாராட்டியுள்ள இந்த விடயம் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : 9 ரன்ஸ்.. என்னா மனுஷன்யா.. சுயநலமின்றி சதத்தை தியாகம் செய்த டு பிளேஸிஸ்.. டிஎஸ்கே மிரட்டல் வெற்றி

அந்த வகையில் விராட் கோலி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டதாவது : சிறப்பாக விளையாடுனீங்க ஸ்டார் பாய்.. சரித்திரத்தை மாற்றி எழுத துவங்கி விட்டாய்.. இனிமேல் அது உயர உயர செல்லும்படி மிகச் சிறப்பாக விளையாட வேண்டும். இந்த பாராட்டுக்கள் அனைத்திற்கும் தகுதியானவன் நீ என தனது பாராட்டினை விராட் கோலி பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement