Mumbai Indians : இவர் என்ன பண்ணிட்டார்னு இன்னும் டீமில் வச்சிருக்கீங்க. மும்பை அணி வீரருக்கு எதிராக கொதித்த – பிரபலங்கள்

MUMBAI
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதுகின்றன. சென்னை அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

csk-vs-mi

- Advertisement -

இந்நிலையில் மும்பை அதிரடி வீரரான பொல்லார்ட் இடம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் மற்றும் ரசிகர்களும் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை உள்ளனர். பொல்லார்ட் இந்த தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்று வெறும் 33 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். மேலும், காயத்தின் காரணமாக சமீபகாலமாக அவர் பந்துவீசுவதும் கிடையாது.

ஒரு பெரிய பிளேயரை ஓரிரு ஆட்டங்களில் இப்படி குறைசொல்வதா என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால், 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 217 ரன்கள், 2017ஆம் ஆண்டு 17 போட்டிகளில் 385 ரன்கள், 2018ஆம் ஆண்டு 9 போட்டிகளில் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் பொல்லார்டு. தொடர்ந்து இந்த வருடமும் சிறப்பாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

pollard

எனவே, பொல்லார்டை அணியில் இருந்து நீக்க அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், மும்பை அணி நிர்வாகம் அவரது திறமையின் மீது கொண்ட நம்பிக்கையினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement