இந்த கொரோனா பாதிப்பு நேரத்தை சரியாக பயன்படுத்தி பலமாக மும்பை அணிக்கு திருப்புவேன் – மும்பை வீரர் அதிரடி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் 20 ஓவர்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது செயல்பட்டு வருபவர் பொல்லார்ட். கிரிக்கெட்டில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக திரும்பியுள்ள பொல்லார்ட் தலைமையில் சில தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.

Pollard

- Advertisement -

டி20 போட்டிகளில் மிகப்பெரிய அதிரடி ஆட்டக்காரர் என்றும் ஆல்ரவுண்டர் என்றும் அறியப்படும் பொல்லார்ட் உலக அளவில் நடைபெறும் பல்வேறு டி20 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகிறார். தற்போது பாகிஸ்தானில் நடைபெற்ற டி20 லீக்கில் காயம் காரணமாக விலகினார் பொல்லார்ட்.

தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக தற்போது தனது வீட்டில் இருக்கும் 32 வயதான பொல்லார்ட் தற்போது இந்த ஓய்வு நேரத்தில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். மேலும் இது போன்ற நேரங்கள் கிடைப்பது வீரர்களுக்கு கட்டாயம் அவசியமான ஒன்று ஏனெனில் சில தொடர்களுக்கும் முன்னர் நான் வலது தொடை பகுதியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தேன்.

Pollard (1)

அதனால் சில தொடர்களில் நான் விளையாட முடியாமல் போனது மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற டி20 லீக் தொடரையும் நான் தவற விட்டேன். எனவே இந்த நேரத்தில் நான் எனது உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துவேன். வரும் தொடர்களில் நான் சிறப்பாக விளையாட என்னுடைய உடல் அமைப்பை வைத்துக் கொள்ள இந்த நேரம் எனக்கு மிகவும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடங்கும் பட்சத்தில் மும்பை அணிக்காக பொல்லார்ட் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் ஏகப்பட்ட அனுபவம் கொண்ட இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய வீரராக பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

pollard

தற்போது கொரோனாவின் அச்சம் காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையும் தெளிவாக வெளியாகாத நிலையில் இந்த நேரத்தை கிரிக்கெட்டர்கள் அவர்களது குடும்பத்தினருடன் கழித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த மாதம் இறுதிவரை எந்த ஒரு கிரிக்கெட் தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement