ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? – கைரன் பொல்லார்டு வெளியிட்ட தெளிவான விளக்கம்

Kieron-Pollard
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் கைரன் பொல்லார்டு கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமாகி இதுவரை 189 போட்டிகளில் விளையாடி 3412 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் கை கொடுத்த அவர் 63 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். போட்டியின் இக்கட்டான இறுதி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டும் பொல்லார்டு மும்பை அணிக்காக எத்தனையோ போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்து மட்டுமின்றி நம்ப முடியாத பல போட்டிகளை மும்பை அணிக்காக வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமாகிய அவர் 13 சீசன்களாக மும்பை அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற ஒரே வீரராக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கைரன் பொல்லார்டை கனத்த மனதுடன் அடுத்த ஐபிஎல் சீசனுக்கான அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் வெளியேற்றி இருந்தது. இந்நிலையில் தற்போது கைரன் பொல்லார்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

இப்படி மும்பை அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டதுமே பொல்லார்டு ஓய்வினை அறிவித்தது பலரது மத்தியிலும் அதிக அளவு பேசப்படும் விடயமாக மாறி இருந்தாலும் பொல்லார்டு தான் ஏன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றேன் என்பது குறித்து தெளிவான ஒரு விளக்கத்தை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ள பதிவில் : இந்த முடிவு சற்று கடினமான முடிவு தான். ஏனெனில் என்னால் இன்னும் சில ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிருக்க முடியும்.

ஆனால் அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு சில மாற்றங்களை செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நினைக்கிறது. அந்த வகையில் நான் அவர்களது எண்ணத்திற்கு தலை சாய்க்க கடமைப்பட்டிருக்கிறேன். அதோடு ஒருமுறை மும்பை அணிக்காக அறிமுகம் ஆகிய நான் இதுவரை மும்பை அணிக்காகவே விளையாட வருகிறேன்.

- Advertisement -

அதனால் இனிமேல் என்னால் வேறு ஒரு அணிக்கு சென்று மும்பை அணியை எதிர்த்து விளையாடுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாது. கடந்த 13 ஆண்டுகளாக மும்பை அணிக்காக மட்டுமே நான் விளையாடி இருக்கிறேன். அந்த வகையில் நான் இறுதிவரை மும்பை அணியிலேயே இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்த படி தற்போது ஓய்வை அறிவித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : எல்லாம் சரிதான் ஆனால் அந்த விஷயத்தில் சூரியகுமார் சொதப்பிட்டாரு – விமர்சிக்கும் வாசிம் ஜாபருக்கு ரசிகர்கள் பதிலடி

மேலும் மும்பை அணியின் நிர்வாகத்தினர், உரிமையாளர்கள், வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் என் மீது அன்பும், அக்கறையும், மரியாதையும் எப்பொழுதுமே வழங்கி உள்ளனர். அவர்களது அன்புக்கு நன்றி என்று தனது கருத்துக்களை பதிவிட்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement