வெஸ்ட் இண்டீஸ் அணியை இவர் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு செல்ல இவரால் முடியும் – இளம்வீரரை புகழ்ந்த பொல்லார்ட்

Pollard
- Advertisement -

ஆடவருக்கான ஏழாவது டி20 உலக கோப்பையானது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் முடியவடைய இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கு முன்பாக அதிகமான சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடப் போகும் அணியாக இருக்கப்போகிறது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி. அந்த அணியானது உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக மொத்தம் 15 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்த தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பெயர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Wi

இதற்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறாத ஷிம்ரன் ஹெட்மையர் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கும் ஹெட்மையர் தான் எதிர்கால வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டமைக்கப் போகிறார் என்று தெரிவித்திருக்கிறார் அந்த அணியின் கேப்டனான கைரன் பொல்லார்ட். இதுகுறித்து பேசிய அவர்,
சிறந்த இளம் வீரரான ஹெட்மையர் தான் எதிர்கால வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல போகிறார். அதற்கான அத்தனை திறமையும் அவரிடம் உள்ளது.

- Advertisement -

மேலும் கிரிக்கெட் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வேண்டுமென்றே நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அதை அவர் தான் தீரமானிக்கப் போகிறார். அவருடைய கையில் தான் எல்லாம் உள்ளது. நாங்கள் அனைவரும் அவரை ஆழமாக நேசிக்கிறோம் என்பதை அவரும் உணர்ந்து வைத்திருக்கிறார் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Hetmyer 1

கடந்த 2017ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அறிமுகமான் ஷிம்ரன் ஹெட்மையர், தொடர்ந்து அந்த அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் நிலையான மற்றும் அதே சமயம் அதிரடியான ஆட்டத்தை வழங்கி வந்தார். அதற்கிடையில் கொரானா காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்படன. அதற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில், உடல் திறன் சோதனையில் தகுதி பெறாத ஹெட்மையரை அணியில் இருந்து நீக்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம். அப்போது அது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

தற்போது வளர்ந்துவிட்ட நவீன கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் அனைவரும் தங்களது உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இதனை ஹெட்மையர் செய்யத் தவறி வருகிறார். அவர் தனது உடலை ஃபிட்டாக வைத்திருந்தால் தான் அவருக்கு மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை தான் பொல்லார்ட் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வரும் ஷிம்ரன் ஹெட்மையர், அந்த அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 45 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1430 ரன்கள் அடித்துள்ளார். அதுவே டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, 30 இன்னிங்சுகள் விளையாடி 838 ரன்களையே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement