பணத்துக்காக தப்பு பண்ணிட்டீங்க, வாழ்க்கையிடம் தோற்று மானஸ்தனாக பொல்லார்ட் எடுத்த முடிவு – பின்னணி அலசல் இதோ

Pollard
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 15ஆம் தேதியன்று நடத்துகிறது. அதற்கு முன்பாக அந்தந்த அணி நிர்வாகங்கள் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு வரும் நிலையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது அதிரடி படையின் தளபதியாக செயல்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கை நாயகன் கைரன் பொல்லார்ட்டை விடுவிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த 2010 முதல் ஆல் ரவுண்டராக மும்பை அணியில் விளையாடி வந்த அவர் எத்தனையோ தோற்க வேண்டிய போட்டிகளில் கடைசி நேரத்தில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து எதிர்பாராத வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 5 கோப்பைகளை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டு வந்தார்.

Kieron-Pollard

- Advertisement -

அதனால் கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து மும்பை தக்க வைத்த அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக பார்மை இழந்து அதிரடியாக ரன்களை குவிக்க தவறியதால் கடைசியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அவரது மோசமான செயல்பாடுகள் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அளவுக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் அவரை தற்போது மும்பை நிர்வாகம் மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

பணமும் மானஸ்தனும்:

இருப்பினும் மும்பை தவிர்த்து வேறு அணியில் விளையாட விரும்பாத பொல்லார்ட் ஐபிஎல் தொடரிலிருந்து 35 வயதிலேயே ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். அதே சமயம் அவரைப்போன்ற தரமான அனுபவம் கொண்டவரை வெளியே விட விரும்பாத மும்பை தங்களது அணியின் பேட்டிங் பயிற்சியாக நிரூபித்துள்ளது. இங்கு பணத்துக்காக வாழ்க்கையில் தோற்று மானஸ்தனாக முடிவெடுத்து மீண்டும் பணத்தை நோக்கிய பயணத்தில் பொல்லார்ட் களமிறங்கியுள்ளதை பற்றி பார்ப்போம். அதாவது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்ட அவர் தனது தாயகமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்காகவும் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு 2012, 2016 ஆகிய வருடங்களில் 2 டி20 உலக கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

Pollard

அதனாலேயே கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் வெள்ளை பந்து அணியின் கேப்டன் என்ற பணத்தையும் தாண்டிய மிகப்பெரிய கௌரவத்தை அவர் அடைந்தார். ஆனால் சமீப காலங்களில் வீரர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க முடியாமல் பொருளாதார நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் தவிப்பதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேப்டனாக செயல்பட்ட பொல்லார்ட் இனி வரும் காலங்களில் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக 35 வயதிலேயே கேப்டன்ஷிப் பதவியை தூக்கி எறிந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று மார்ச் மாதம் நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.

- Advertisement -

ஆனால் நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் வாழ்க்கை எனும் நியதியிடம் தோற்ற அவர் ஃபார்மை இழந்து 2022 ஐபிஎல் தொடரின் இறுதியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அதே சமயம் அவரைப் போன்ற முக்கிய வீரர்கள் இப்படி விலகியதாலயே நடைபெற்று முடிந்த 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால் எந்த ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுத்து தாயகத்தை ஒதுக்கினாரோ இன்று அதே ஐபிஎல் தொடரில் அவர் ஒதுக்கப்பட்டுள்ளார்.

Kieron-Pollard

இதை ஏன் பொல்லார்ட்டுக்கு மட்டும் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? ஏனெனில் 39 வயதிலும் ட்வயன் ப்ராவோ இதே ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடப் போகிறார். மேலும் பணத்துக்காக ஐபிஎல் தொடருக்கு ரசல் முன்னுரிமை கொடுத்தாலும் இதுவரை மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸை புறக்கணித்து ஓய்வு பெறவில்லை. ஆனால் 35 வயதிலேயே 36 வயதாகும் ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு பயிற்சியாளராக பொல்லார்ட் செயல்பட போகிறார்.

அப்படி பணத்துக்காக வாழ்க்கையில் தோற்று தவறு செய்தாலும் மும்பைக்காக விளையாடிய நான் மும்பைக்கு எதிராக உயிர் போனாலும் விளையாட மாட்டேன் என்ற வகையில் மானஸ்தனாக 35 வயதிலேயே ஓய்வு பெற்று சிறந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் தோல்வியில் தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்காக ஏதேனும் உதவி செய்யும் முடிவை எடுக்காத அவர் மீண்டும் பணத்துக்காக அதே மும்பை அணியில் பயிற்சியாளராக செயல்பட மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக அவரை குறை சொல்லவில்லை. பணத்தை தேடி செல்வது மனிதனின் இயல்பு தானே.

Advertisement