மும்பை அணியின் அனுபவ வீரரான இவரே உலகின் தலைசிறந்த டி20 வீரராம் – இங்கி வீரர் புகழாரம்

உலகம் முழுவதும் ஐபிஎல் தொடருக்காக தற்போது எதிர்பார்ப்புகள் அதிகமாக கிளம்பியுள்ளது. தற்போது வரை எந்தவிதமான பெரிய கிரிக்கெட் தொடர்களும் நடத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அதன் பின்னர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான தொடர் மட்டுமே நடைபெற்றது.மற்ற நாடுகளில் உள்ளூர் தொடர்கள் கூட நடைபெறவில்லை.

ipl

இப்படி இருக்கையில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஐபிஎல் தொடர் இந்த வருடம் வெளிநாட்டில் நடக்கிறது. இதற்காக இந்த தொடரில் கலந்து கொள்ளும் 8 அணி வீரர்களும் துபாய் சென்று அங்கு தற்போது பயிற்சியை துவக்கி விட்டார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிஸ் கோவர் உலகின் மிகச்சிறந்த டி20 வீரர் யார் என்பது குறித்து பேசியிருக்கிறார் . அவர் கூறுகையில்…

ஐபிஎல் தொடர்தான் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டி20 போட்டிகள் குறித்த பார்வையை மாற்றி விட்டது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளின் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். மேலும் இளம் வீரர்கள் சர்வதேச அளவிலான தரத்தை பெறுவதற்காக இது ஒரு வழியாகவும் அமைந்திருக்கிறது.

Pollard

கீரன் பொல்லார்ட் உலகின் மிகச்சிறந்த டி20 வீரராக இருந்து வருகிறார். மும்பை அணிக்காக பல போட்டிகளில் கடைசி வரை நின்று போராடி வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். அவருக்கு ஏற்கனவே தெரியும் டெஸ்ட் போட்டிகளில் ஆட சரிப்பட்டு வரமாட்டார் என்று இதனால்தான் அவர் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை என்று கூறியுள்ளார் டேவிஸ் கோவர்.

- Advertisement -

மும்பை அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் பொல்லார்ட் பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி அசாத்தியமான பீல்டிங் என அசத்தி வருகிறார். ஐ.பி.எல் மட்டுமின்றி உலகளவில் நடைபெறும் அனைத்து டி20 தொடர்களிலும் முக்கிய வீரராக பொல்லார்ட் கலந்து கொண்டு விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.