Kieron Pollard : ஒற்றை கையால் எளிதாக சிக்ஸ் அடித்த மும்பை அணி வீரர் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 19 ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை

Pollard
- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பொல்லார்ட். அவரின் அதிரடி ஆட்டம் மூலம் மும்பை அணி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை அடித்தது. பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்களை அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் குறிப்பாக பொல்லார்ட் ஒரே கையால் சிக்ஸ் ஒன்றினை அடித்தார். அவரின் பவரால் பந்து எளிதாக பவுண்டரி எல்லையினை கடந்தது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 19 ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்டினை இழந்துவந்தது. மும்பை அணியின் பொல்லார்ட் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். மத்தபடி யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

அதை தொடர்ந்து விளையாடிய சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை. மும்பை அணியின் அறிமுக வீரரான அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்துவீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் சன் ரைசர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Advertisement