வீடியோ : ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சி.எஸ்.கே அணியை அசைத்து பார்த்த பொல்லார்ட்

Pollard

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியானது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று முடிந்தது. இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சாம்பியன் அணிகளாக விளங்குவதால் இப்போட்டியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

CSKvsMI

இப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்தது. இந்த போட்டியில் துவக்க வீரர்களான கெய்க்வாட் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த மொயின் அலி டூபிளெஸ்ஸிஸ் உடன் சிறப்பாக விளையாடி பாட்னர்ஷிப் அமைத்து சென்னை அணிக்கு ரன்களை வேகவேகமாக சேர்த்தனர். குறிப்பாக இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் 108 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் ராயுடு 72 ரன்களும், ஜடேஜா 22 ரன்களை குவிக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

rayudu 2

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒருகட்டத்தில் சென்னை அணி அதிவேகமாக ரன்களை சேர்த்து கொண்டிருந்தபோது 12வது ஓவரை வீசிய பொல்லார்ட் அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி மும்பை அணிக்கு ஒரு திருப்பத்தை கொடுத்தார் . 5வது பந்தில் 50 ரன்கள் எடுத்திருந்த டூபிளெஸ்ஸிஸ் அதற்கு அடுத்த கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்திருந்த ரெய்னாவையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க வைத்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

அவர் எடுத்த இந்த இரண்டு விக்கெட்டுகள் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ :