- Advertisement -
டி20

முரட்டு சிக்ஸரால் ரசிகை காயம்.. பிளே ஆஃப் அழைத்த சென்ற பொல்லார்ட்.. செய்த நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. அதில் ஜூலை 22ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற 19வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் வென்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய எம்ஐ அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய லாக் ஏஞ்சல் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.1 ஓவரில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு கேப்டன் சுனில் நரேன் 6, டேவிட் மில்லர் 6, சந்த் 9, நிதிஷ் குமார் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதிகபட்சமாக ஜேசன் ராய் 27, ஆண்ட்ரே ரசல் 35 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

பொல்லார்ட் அன்பு:
எம்ஐ நியூயார்க் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 3, ட்ரெண்ட் போல்ட் 2, நோஸ்தஷ் கெஞ்சிக் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 132 ரன்களை துரத்திய நியூயார்க் அணிக்கு தேவால்ட் பிரேவிஸ் 27 (19), நிக்கோலஸ் பூரான் 35 (28) ரன்கள் அடித்தனர். ஆனால் ரூபன் கிளின்டன் 8, மோனக் படேல், ஹீத் ரிச்சர்ட்ஸ் 11, ரோமரியா செபார்ட் 1 ரன்களில் அவுட்டானதால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

அப்போது ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 15வது ஓவரில் 3, 4, 5 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்சர்களைப் பறக்க விட்ட கேப்டன் பொல்லார்ட் அதிரடியாக 33* (12) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 17 ஓவரிலேயே 134/6 ரன்கள் எடுத்த எம்ஐ நியூயார்க் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மறுபுறம் லாஸ் ஏஞ்சல்ஸ் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சுனில் நரேன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

இதையும் சேர்த்து 7 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த எம்ஐ நியூயார்க் 5 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் அதிர்ஷ்டத்துடன் பிளே ஆஃப் சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது. முன்னதாக அப்போட்டியில் பொல்லார்ட் அடித்த 3 முரட்டுத்தனமான சிக்சர்களில் ஒன்று மைதானத்தில் இருந்த மும்பை ரசிகை மீது பட்டு காயத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தோனியின் தலைமையின் கீழ் விளையாடி விட்டேன்.. ஆனாலும் ஒரு ஆசை நிறைவேறாமல் போய்விட்டது – ஷிவம் துபே கருத்து

அதனால் பதறிய பொல்லார்ட் போட்டி முடிந்ததும் அந்த ரசிகையை நேரில் சந்தித்து காயம் பட்ட இடத்தை தொட்டுப் பார்த்து பார்த்து மன்னிப்பு கேட்டார். அத்துடன் “காயத்துக்கு மருந்தாக தம்மால் முடிந்தது” என்று சொல்லிக்கொண்டே தனது தொப்பியில் கையொப்பமிட்ட பொல்லார்ட் அதை அந்த ரசிகைக்கு பரிசாக கொடுத்தார். மேலும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று அந்த ரசிகையின் கணவரிடமும் கேட்டுக்கொண்ட பொல்லார்ட் கடைசியில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

- Advertisement -