வலைத்தளத்தில் நெகிழ்வுடன் தன் தந்தையின் அறிவுரைகளை பதிவிட்ட கோலி.!

- Advertisement -

இளம் வயதிலேயே கிரிக்கெட் உலகில் நுழைந்து சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் கோலி. தோனிக்கு பிறகு இந்திய அணியை பொறுப்பேற்று நடத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் கோலி. சமீபத்தில் தனது தந்தை கற்றுகொடுத்ததை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

விராட் கோலி, 2006 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். பின்னர் 2008 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய யு19 அணி உலக கோப்பையை வென்றது. பின்னர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் விளையாடி வந்த கோலி, 2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். கோலி இந்திய அணியில் சேரும் போது அவருடைய தந்தை அவருடன் இல்லை.

2006 ம் ஆண்டில் விராட் கோலிக்கு 18 வயது இருக்கும்போது அவரது தந்தை பிரேம் கோலி இறந்துவிட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சென்ற தந்தையர் தினதன்று கோலி சிறு வயதில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

viratkoli

அவர் அதில் குறிப்பிட்டிருந்தது ‘ எனக்கு ஆரம்பம் முதல் கடினமாக உழைப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர். எதிலும் பலனை எதிர்பார்க்காமல் கடின உழைப்பை மட்டுமே நம்பு என்று பாடம் புகட்டியவர். என்னை சரியான பாதையில் வழி நடத்தியவர். நன்றி அப்பா !” என்று தனது தந்தையை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் விராட்.

Advertisement