தாடியை இன்சூர் செய்தாரா கோலி.! உண்மை என்ன..

viratkholi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, எப்போதும் தனது ஸ்டைல் குறித்த விடயங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விராட் கோலி, தனது தாடியை இன்சூர் செய்துள்ளார் என்று ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.

vkholi

- Advertisement -

சமீபத்தில் வெளியான அந்த cctv வீடியோ காட்சிகளில் விராட் கோலியின் தாடியை சிலர் நெருக்கமாக புகைப்படம் எடுக்கின்றனர். பின்னர் அதனை அளவுகோள் கொண்டு விராட் கோலியின் தாடியை அளக்கின்றனர். இதைத்தொடர்ந்து விராட், அவருக்கு முன்னால் இருந்த ஒரு படிவத்தை எடுத்து படித்து பார்த்து கையொப்பம் இடுகிறார். இதனால் விராட் கோலி தனக்கு பிடித்தமான தாடியை காப்பீடு செய்துள்ளார் என்று பலரும் எண்ணி வந்தனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலி தனது தாடியை காப்பீடு செய்துள்ளார் என்ற தகவளை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இந்திய கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல் கூட ‘உங்களுக்கு தாடி மீது தனி பிரியம் உண்டு என்பது தெரியும். இந்த வீடியோவை பார்க்கும்போது, இன்சூர் செய்யும் அளவுக்கு தாடி மீது அவ்வளவு பிரியமா’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினர்.

virat

இந்நிலையில் வீடியோ தொடர்பான உண்மையான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ விராட் கோலியின் தாடி சம்மந்தபட்ட வீடியோ தான். ஆனால், அதில் விராட் தனது தாடிக்கு காப்பீடு எதுவும் செய்யவில்லை. அது புதிதாக வெளியாகியுள்ள பிளிப்ஸ் நிறுவனத்தின் ஹேர் ட்ரிம்மர் தொடர்பான ஒரு ப்ரோமோ விளம்பர வீடியோ என்று தெரியவந்துள்ளது. மக்கள் மத்தியில் இந்த ட்ரிம்மரை பற்றிய ஆர்வத்தை தூண்டவே பிலிப்ஸ் நிறுவனம் இப்படி ஓரு முயற்சியை எடுத்துள்ளது. தற்போது அந்த விளம்பரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement