கோலிகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இதுதான்.! புகழ்ந்து தள்ளிய சச்சின்

இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்படும் கோலி உள்ளூர் போட்டிகளிலும் வெளியூர் போட்டிகளிலும் நல்ல சாதனைகளை பெற்றுள்ளார். ஆனால், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் ரன்களை குவிக்க திணறி இருக்கிறார் கோலி. இந்நிலையில் கோலியின் திறமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

kholifunny

இங்கிலாந்து மண்ணில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிராவிட் தலைமையிலான அணி தான் டெஸ்ட் தொடரை கைபற்றியது. அதற்கு பின்னர் தோனி தலைமையிலான அணி 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் வெல்ல முடியாமல் தினறியது. அதே போல கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரில் விராட் கோலி 134 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் கோலி சிறப்பாக விளையாட மாட்டார் என்று ஒரு சில கருத்துக்களும் எழுந்தது. இந்நிலையில் கோலியின் திறன் குறித்து பேசிய சச்சின் ‘கோலி எப்போதுமே ரன்களை குவிக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர். அவர் கடந்த தொடர்களில் செய்த தவறுகளை உணர்ந்து அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிப்பார். தான் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள அதற்கான பயிற்சிகளையும் அவர் செய்வார். அவர் எதை பற்றியும் கடந்த போட்டிகளை பற்றி கவலைப்படாமல் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

sachin-kohli

இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 9 போட்டிகள் இந்தியாவிலும் 5 போட்டிகள் இங்கிலாந்து மண்ணிலும் விளையாடியுள்ளார். இந்த 14 போட்டிகளில் கோலி 992 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.