ஐ.பி.எல் நிறுத்தப்பட்ட அன்று சன் ரைஸர்ஸ் அணியில் நடந்த திக் திக் சம்பவங்கள் – கலீல் அகமது பகிர்ந்த அனுபவம்

khaleel 2

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது சில தினங்களுக்கு முன், தொடரில் பங்கேற்று இருந்த சில வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தொடரில் நடைபெற இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி நாளன்று தான் இந்த தொடரை ஒத்தி வைக்கும் அறவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. அந்த நாளன்று ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனானா விருத்திமான் சாஹாவிற்கு கொரனா தொற்று உறுதி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

mishra

சஹாவிற்கு கொரானா தொற்று உறுதியான சமயத்தில் அங்கே என்ன நடந்தது என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கிறார், ஐதராபாத் அணியின் மற்றொரு வீரரான கலீல் அஹமத். ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அனைத்து வெளிநாட்டு வீரர்களையும், இந்திய வீரர்களையும் பாதுகாப்பான முறையில் அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறது பிசிசிஐ. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கலீல் அஹமத் தனது வீட்டிற்கு பாதுகாப்பான முறையில் வந்து சேர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையில் ஏர்போட்டில் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபருக்கு பேட்டியளித்த கலீல் அஹமத், டெல்லியில் நான் ஹோட்டலின் அறையில் இருந்தபோது எங்கள் அணியின் நிர்வாகி ஒருவர் என் அறைக் கதைவை தட்டினார். கதவைத் திறந்த என்னிடம், அடுத்த அறிவிப்பு வரும் வரை உள்ளயே இருங்கள் வெளியே வராதீர்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அறைக் கதவை தட்டிய அவர், எனது உடைமைகளை எல்லாம் கட்டச் சொன்னார்.

khaleel

ஏனெனில் நாங்கள் எல்லோரும் வீட்டிற்கு செல்லப் போகிறோம் என்பதால். இது எல்லாமே சாஹாவிற்கு கொரனா உறுதியானதை அடுத்து நடந்தவைகள். அப்போது எனக்கு எங்கள் அணியில் இருக்கும் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அது சாஹாவிற்கு தான் என்பது அதற்குப் பிறகுதான் எங்கள் எல்லோருக்கும் தெரியவந்தது.
இது இது எல்லாமே நடந்து முடிந்த பிறகு என்னுடைய அறைக்கு பிசிசிஐ இன் விதிமுறைகள் வந்தது. அதன்படி நான் மிகவும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறேன்.

- Advertisement -

khaleel 1

எங்களுடைய அணி வீரருக்கு கொரானா தொற்று உறுதியானதால் என்னையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கி இருக்கின்றனர். நானும் என் குடும்பத்தினரிடம் பேசி விட்டேன். ஆறு நாட்களுக்கு ஒரு தனி அறையில் நான் என்னை தனிமைப் படுத்திக் கொண்டு விடுவேன் என்று கூறியிருக்கிறேன். உயிரைவிட மேலானது ஏதுமில்லை. நான் பிசிசிஐயின் இந்த முடிவை வரேவேற்கிறேன். மேலும் என்னை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்ததற்கும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் கலீல் அஹமத்.

Advertisement