- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ப்ளீஸ் இதை பிரிதிவிக்கு காட்டுங்க.. ஆளே மாறிய சர்பராஸ் இதையும் செய்வாருன்னு நம்புறேன்.. பீட்டர்சன் பாராட்டு

மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பாராஸ் கான் இந்தியாவுக்காக விளையாடும் முனைப்புடன் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்தார். அதன் பயனாக கடந்த 2024 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் அடுத்தடுத்த அரை சதங்களை அடித்து அசத்தினார். அடுத்து விளையாடிய நியூஸிலாந்து தொடரில் பெங்களூருவில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது சதத்தை (150) அவர் எஞ்சியப் போட்டிகளில் அசத்தவில்லை.

அதற்கிடையே வெளிநாடுகளில் அசத்த மாட்டார் என்று கருதிய தேர்வுக்குழு கடந்த ஆஸ்திரேலியா மற்றும் நடப்பு இங்கிலாந்து தொடரில் சர்பராஸ் கானை கழற்றி விட்டது. ஆனால் அதற்கெல்லாம் அசராத அவர் கடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரில் பெரிய ரன்கள் குவித்து தேர்வாளர்களுக்கு வெளிநாட்டில் தம்முடைய திறமையைக் காண்பித்தார்.

- Advertisement -

சர்பராஸ் கானா இது:

முன்னதாக சர்பராஸ் கான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு அவருடைய உடல் பருமன் பெரிய தடையாக இருந்தது. சொல்லப்போனால் உருளைக்கிழங்கு போல் இருக்கும் இவரை எப்படி இந்திய அணியில் தேர்வு செய்வது? என்று சமூக வலைதளங்களில் கிண்டல்களும் காணப்பட்டது. அதனால் கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து சர்பராஸ் தன்னுடைய உடல் எடையைக் குறைத்து வருகிறார்.

அதன் உச்சமாக தற்போது மிகவும் ஃபிட்டாக இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதைப் பார்த்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இதே போல சர்பராஸ் கான் களத்திலும் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று பாராட்டியுள்ளார். மேலும் ஃபிட்டாக இருக்கும் அவருடைய புகைப்படத்தை வீழ்ச்சியடைந்துள்ள இளம் இந்திய வீரர் பிரத்வி ஷா பார்த்து முன்னேற வேண்டும் என்று பீட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

பீட்டர்சன் பாராட்டு:

இது பற்றி ட்விட்டரில் பீட்டர்சன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “அபாரமான முயற்சி இளம் பையனே. மிகப்பெரிய வாழ்த்துக்கள். களத்திலும் நீங்கள் இதே போல தொடர்ச்சியான நல்ல செயல்பாடுகளை முன்னிலையாக கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் முன்னுரிமைகளை மறு சீரமைக்க நீங்கள் செலவழித்த நேரத்தை நான் விரும்புகிறேன்”

இதையும் படிங்க: ஒரே போட்டியுடன் தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு இப்படி நடந்தது அநியாயம் – ஹர்பஜன் சிங் கருத்து

“இதை யாராவது தயவு செய்து பிரிதிவியிடம் காட்டுவீர்களா? இது செய்யக்கூடியது. அதற்கு வலுவான உடல் மற்றும் மனம் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுவது போல பிரதிவி ஷா அடுத்த சச்சினாக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஐபிஎல் பணத்தால் ஏற்பட்ட கவனம் சிதறல், சுமாரான ஃபிட்னஸ் போன்றவற்றால் அவருடைய கேரியர் கேள்விக்குறியாக நிற்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -