- Advertisement -
ஐ.பி.எல்

ப்ளீஸ் நிறுத்துங்க.. அம்பாத்தி ராயுடுவை அப்படி சொல்லல.. ஆர்சிபி ரசிகர்களிடம் பீட்டர்சன் கோரிக்கை

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் அம்பாத்தி தெரிவித்த கருத்துக்கள் ஆர்சிபி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் ஆரம்பத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய பெங்களூரு கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இருப்பினும் அந்த வெற்றியை கோப்பையை வென்றதற்கு நிகராக விராட் கோலியும் ஆர்சிபி ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்த எலிமினேட்டர் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த பெங்களூரு 17வது வருடமாக கோப்பையை வெல்லாமல் வெளியேறியது. அப்போது சிஎஸ்கே அணியை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடினால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது என்று ஆர்சிபி அணிக்கு ராயுடு அறிவுரை வழங்கினார்.

- Advertisement -

பீட்டர்சன் கோரிக்கை:
அத்துடன் விராட் கோலி போல ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது என்றும் அவர் ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். அது போக சொந்த சாதனைக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடினால் இந்நேரம் பெங்களூரு பல கோப்பைகளை வென்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அது ஆர்சிபி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

அந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு ஆதரவாக ஆரஞ்சு வண்ண உடைய அணிந்து ராயுடு வர்ணனை செய்தார். ஆனால் கடைசியில் கொல்கத்தா வெற்றி பெற்றதால் அதை உடனடியாக மாற்றிய அவர் நீல நிற ஜெர்ஸியை அணிந்து கொண்டு தொடர்ந்து வர்ணனை செய்தார். அப்போது “உங்களுடைய செயல் ஜோக்கர் போல இருப்பதாக” நேருக்கு நேராக ராயுடுவை கலாய்க்கும் வகையில் கெவின் பீட்டர்சன் பேசினார்.

- Advertisement -

அது உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது. சொல்லப்போனால் தங்களைப் பற்றி தாறுமாறாக பேசிய ராயுடுவை ஜோக்கர் என்று ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து ட்ரெண்டிங் செய்தனர். இந்நிலையில் ராயுடுவை தாம் ஜோக்கர் என்று விளையாட்டாக சொன்னதை ஆர்சிபி ரசிகர்கள் உண்மையாக எடுத்துக்கொண்டு திட்டி தீர்ப்பதை நிறுத்த வேண்டும் என்று பீட்டர்சன் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 3வது கோப்பைக்கான விதை.. சென்னை, மும்பை அணிகள் செய்யாத 3 முத்தான சாதனை படைத்த கொல்கத்தா

“கமான் நண்பர்களே. சமூக வலைதளங்களில் இந்திய வீரருக்கு எதிரான இந்த எதிர்ப்புத்தனம் குறைய வேண்டும். எடுத்துக்காட்டாக அம்பாத்தி ராயுடு. ஐபிஎல் ஃபைனல் முடிந்ததும் நான் குழப்பத்தில் இருந்தேன். ஏனெனில் திடீரென அந்த கேலி ராயுடுவுக்கு எதிரான துஷ்பிரயோகத்தின் பனிசரிவாக மாறியது. தயவு செய்து இதை நிறுத்துங்கள்” என்று கையெடுத்து கும்பிடும் எமோஜியை போட்டு பதிவிட்டுள்ளார்.

- Advertisement -