- Advertisement -
உலக கிரிக்கெட்

மறுபடியும் சொல்றேன்.. அந்த மாதிரி பந்துகளுக்கு 12 ரன்ஸ் கொடுத்தா இன்ரெஸ்ட் வரும்.. ஐசிசிக்கு பீட்டர்சன் கோரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் தெனாப்பிரிக்கா 3 போட்டிகள் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் 2 – 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றது. அடுத்ததாக நடைப்பெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்கா தொடர்ந்து 5வது முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை வென்றது.

அந்தத் தொடரில் தென்னாபிரிக்காவுக்காக விளையாடிய இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் மிகவும் அதிரடியாக விளையாடி அசத்தினார். குறிப்பாக 2வது டி20 போட்டியில் 125* ரன்கள் அடித்த அவர் நிறைய சிக்சர்களை பறக்க விட்டார். அந்த சுற்றுப்பயணத்தில் அவர் அடித்த சிக்ஸர்களில் பெரும்பாலான சிக்ஸர்கள் 100 மீட்டர் தாண்டி ரசிகர்களிடையே விழுந்தது.

- Advertisement -

100 மீட்டருக்கு 12 ரன்ஸ்:

சில சிக்ஸர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்து ப்ரேவிஸ் பலம் என்னவென்று காண்பித்தது. இந்நிலையில் கிரிக்கெட்டில் 100 மீட்டருக்கு மேல் பறக்கும் சிக்ஸர்களுக்கு 6க்கு பதிலாக 12 ரன்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு செய்தால் நிறைய பேட்ஸ்மேன்கள் 100 மீட்டர் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

அப்படி 100 மீட்டர் சிக்சர்கள் அடிக்கப்படுவது ரசிகர்களுக்கு பொழுதுபோக்காகவும் சுவாரசியமாகவும் அமையும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் பீட்டர்சன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன். இப்போது மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஒரு பேட்ஸ்மேன் 100 மீட்டருக்கு மேல் சிக்சர் அடித்தால், அதற்காக ஸ்கோரில் 12 ரன்கள் சேர்க்கப்பட வேண்டும்”

- Advertisement -

பீட்டர்சன் கோரிக்கை:

“அப்படி செய்தால் நிறைய பேட்ஸ்மேன்கள் 100 மீட்டர் சிக்ஸர்களை அடிப்பதற்கு முயற்சிப்பார்கள். அதனால் இன்னும் அதிகமான பொழுதுபோக்கு உண்டாகும்” என்று கூறினார். இருப்பினும் ஏற்கனவே பவுலர்களுக்கு எதிராக நிறைய விதிமுறைகள் இருப்பதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. அதனால் ஐசிசி இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்குமா என்பது சந்தேகமாகும்.

இதையும் படிங்க: பாகிஸ்தானிடம் சூரியகுமார் பேட்டிங் எடுபடல.. இந்திய அணியில் அந்த 2 வீக்னெஸ் இருக்கு.. பசித் கான் பேட்டி

அதே சமயம் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை உள்ளது. இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. அது போல வருங்காலங்களில் ஏதேனும் தனியார் டி20 தொடர்களில் 100 மீட்டர் சிக்ஸர்களுக்கு 12 ரன்கள் கொடுக்கப்படும் காலம் விரைவில் வருவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -