இந்த ஐ.பி.எல் தொடரில் இவருக்கு கொடுக்கப்பட்ட தொகை ரொம்ப அதிகம். வொர்த் இல்ல – பீட்டர்சன் கருத்து

Pieterson-1
- Advertisement -

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான் கிறிஸ் மோரிஸை இந்த வருட ஐபிஎல் ஏலத்தின்போது 16.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இவ்வளவு பெரிய தொகைக்கு கிறிஸ் மோரிஸ் ஏலம்போனது அப்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சென்ற ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் மோரிஸ் சரியாக செயல்படாத காரணத்தால் இந்த ஆண்டில் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஏலத்தின்போது அவருடைய அடிப்படை தொகை 75 லட்சமாக இருந்தது.

Morris

- Advertisement -

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய தொகைக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ் இந்த ஆண்டு ஐபில்லில் என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவருடைய ஆட்டம் அனைவரின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கிறிஸ் மோரிஸைப் பற்றி பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர்,
கிறிஸ் மோரிஸ் ஒரு சாதாரண வீரர். ஆனால் அவருக்கு ஏலத்தின் போது அளிக்கப்பட்ட தொகையோ மிகவும் பெரியது. அவ்வளவு பெரிய தொகைக்கு அவர் தகுதியானவர் இல்லை. தென் ஆப்பிரிக்க அணியிலேயே அவர்களின் முதல் சாய்ஸாக அவர் எப்போதும் இருந்ததில்லை என்று கூறினார்.

மேலும் பேசிய பீட்டர்சன், கிறிஸ் மோரிஸ் ஒன்றும் தனித்துவமானவர் இல்லை. அதிக தொகைக்கு அவர் ஏலம் போனதால் அவரிடமிருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் இன்னும் இரண்டு போட்டிகள் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். மீதமிருக்கும் போட்டிகளில் அவர் வெளியே தான் அமர வேண்டும். இந்த ஐபிஎல் அவருக்கு இப்படித்தான் செல்லப் போகிறது என்றும் கூறினார்.

morris

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கிய கிறிஸ் மோரிஸ், அந்த அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த நான்கு போட்டிகளிலும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த ஐபிஎல்லில் அவருடைய எகானமி ரேட் கிட்டத்தட்ட 10 என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement