ராணா வேண்டாம்.. தனது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட பீட்டர்சன் பேட்டி

Kevin Pieterson 2
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் அந்தத் தொடரில் களமிறங்கி இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய தம்முடைய தரமான 11 பேர் கொண்ட அணியை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தேர்ந்தெடுத்துள்ளார். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் கோரிக்கைக்கு இணங்க அவர் இந்த அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

இந்திய அணி:

அதில் ராகுல் ஐந்தாவது இடத்தில் விளையாடுவதே சரியானது என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக அறிமுகமான ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்யாத அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி 3வது போட்டியில் ரன்கள் அடித்துள்ளதால் இந்தியா மகிழ்ச்சியாக இருப்பார்கள். ரோகித், கில், ஸ்ரேயாஸ் ஆகியோரும் நல்ல ரன்கள் அடித்து அசத்தினார்கள்”

“இருப்பினும் கேஎல் ராகுலை நான் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி அதிகப் பந்துகளை எதிர்கொள்வதைப் பார்க்க விரும்புகிறேன். மூன்றாவது போட்டியில் 17 ஓவர்கள் இருக்கும் போது களமிறங்கிய அவர் கொஞ்சம் நேரம் எடுத்து தன்னுடைய ஆட்டத்தை கட்டமைக்கக் கூடியவர். கேஎல் ராகுல் 3 ஓவர்கள் இருக்கும் போது களமிறங்கி 30 ரன்கள் அடிக்கக்கூடியவர் கிடையாது. ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு கொஞ்சம் நேரம் தேவை. எனவே அவர் ஐந்தாவது இடத்தில் விளையாடுவதே சரியானது”

- Advertisement -

இந்திய லெவன்:

“வருண் சக்கரவர்த்தி நன்றாக பவுலிங் செய்கிறார். ஆனால் இதற்கு முன் வெளிப்படுத்திய நல்ல செயல்பாடுகளை வைத்து குல்தீப் யாதவ் சரியானவர் என்று நினைக்கிறேன். இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் துவக்கத்தில் வேண்டும். அர்ஷ்தீப், ஷமி, பாண்டியா ஆகியோருடன் ரவீந்திர ஜடேஜா என்னுடைய முதல் தேர்வாக இருப்பார். ஜடேஜா, குல்தீப், அக்சர் சுழல் துறையில் இருப்பார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அந்தக் கூற்றை நிரூபித்துள்ள ரோஹித் திறமை எனக்கு தெரியும்.. சாம்பியன்ஸ் டிராபியில் அசத்துவாரு.. ஜேபி டுமினி

கெவின் பீட்டர்சன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, குல்தீப் யாதவ்

Advertisement