அந்தக் கூற்றை நிரூபித்துள்ள ரோஹித் திறமை எனக்கு தெரியும்.. சாம்பியன்ஸ் டிராபியில் அசத்துவாரு.. ஜேபி டுமினி

JP Duminy
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்று காண்பித்துள்ள இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பியுள்ளது பலமாக அமைய உள்ளது.

ஏனெனில் சமீபத்திய தொடர்களில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். ஆனால் இங்கிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் அதிரடியான சதத்தை அடித்த ரோகித் சர்மா ஓரளவு ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தரமான வீரர்களுக்கு கிளாஸ் நிரந்தரமானது. ஃபார்ம் தற்காலிகமானது என்றக் கூற்றை ரோகித் சர்மா மீண்டும் நிரூபித்துள்ளதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் ட்ராபியில்:

எனவே சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித் சர்மா பெரியளவில் சிறப்பாக செயல்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஃபார்ம் தற்காலிகமானது. கிளாஸ் நிரந்தரமானது. சில நாட்களுக்கு முன்பாக அதை நான் நினைவுப்படுத்தினேன். ரோகித் சர்மா அந்தக் கூற்றுக்கு பொருத்தமாக இருக்கிறார்”

“அவர் வலுவாக கம்பேக் கொடுப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடன் விளையாடிய கௌரவமான அனுபவம் எனக்கு இருக்கிறது. தனது செயல்பாடுகளை தாண்டி அவர் தொடர்ச்சியாக அசத்தக்கூடிய திறமைகளைக் கொண்ட ஒரு வீரர். சிறந்த தலைவரான அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணிக்காக வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்”

- Advertisement -

ரோஹித் அசத்துவாரு:

“கிரிக்கெட் என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தவர். அதில் சவால்களை எப்படி சமாளிக்கிறோம் என்பதில் தான் வீரர்களாக எங்களுடைய குணம் நிர்ணயிக்கப்படுகிறது. ரோகித் குணம் எனக்குத் தெரியும். கடந்த சில மாதங்களாக அவருடைய பேட்டிகள் மற்றும் நல்ல நடத்தைகளைப் பார்த்து வருகிறேன். இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவர் வலுவாக திரும்புவார்கள் என்று நம்புகிறார்கள்”

இதையும் படிங்க: 402 ரன்ஸ் 33 விக்கெட்ஸ்.. என்னால அஸ்வின் மாதிரி அசத்த முடியும்.. அந்த தொடரிலாவது எடுங்க.. தாகூர் கோரிக்கை

“எனவே விரைவில் ரோஹித் சர்மாவிடம் நம்மால் பெரிய செயல்பாடுகளை பார்க்க முடியும் என்று நான் உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி துபாயில் வரும் பிப்ரவரி

Advertisement