இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் அணி இதுதான். கெவின் பீட்டர்சன் கணிப்பு – பலிக்குமா ?

Pieterson-1
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி தற்போது துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் இந்தப் போட்டியில் யார் வென்று தொடரை கைப்பற்றுவார்கள் என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Dubai

- Advertisement -

அந்த வகையில் தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணிபுரிந்து வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரது கணிப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது மனதுக்கு நிறைவாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும் என நினைத்ததாக தெரிவித்துள்ளார். இந்த பேட்டி இவர் துபாய் வருவதற்கு முன்னர் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

dc

அவரின் கணிப்பு போலவே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் விளையாடி வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகளின் முதல் பாதியில் தனது ஆதிக்கத்தை பலமாக காண்பித்த டெல்லி அணி இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று ஏமாற்றத்தை அளித்தது.

dcvsmi

இருப்பினும் குவாலிப்யர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்த டெல்லி அணி இந்த போட்டியில் மும்பை அணி யை வீழ்த்தி முதல் முறை பட்டம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement