- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னங்க பித்தலாட்டமா இருக்கு? ஐசிசி விதிமுறையை பின்பற்றாமல் வென்ற இந்தியாவை விமர்சித்த பீட்டர்சன்

இங்கிலாந்துக்கு எதிராக புனேவில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா கடைசிப் போட்டிக்கு முன்பாகவே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா சிவம் துபே, ஹர்திக் பாண்டியா ரன்கள் எடுத்த உதவியுடன் 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து 19.4 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக அந்தப் போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய துபே கடைசி ஓவரில் 5வது பந்தில் தலையில் அடி வாங்கினார்.

- Advertisement -

பீட்டர்சன் விமர்சனம்:

அவரை சோதித்த மருத்துவர் தொடர்ந்து விளையாடலாம் என்று சொன்னதைத் தொடர்ந்து கடைசிப் பந்தை எதிர்கொண்ட அவர் ரன் அவுட்டானார். அதைத்தொடர்ந்து இங்கிலாந்து பேட்டிங் செய்ய வந்த போது ஐசிசி சப்ஸ்டியூட் விதிமுறைப்படி சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை இந்தியா தேர்ந்தெடுத்தது. அந்த வாய்ப்பில் 3 விக்கெட்டுகள் எடுத்த ராணா வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் ஐசிசி மாற்று வீரர் விதிமுறையை இந்தியா சரியாக கடைபிடிக்கவில்லை என்று முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். குறிப்பாக மாற்று வீரர் பேட்ஸ்மேனாக இருந்தால் பேட்ஸ்மேன், பவுலராக இருந்தால் பவுலர் என்ற வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஐசிசி விதிமுறையாகும். ஆனால் பேட்டிங் ஆல் ரவுண்டரான துபேவை முழு நேர பவுலரான ராணாவை வைத்து இந்தியா மாற்றியதாக பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

யாரிடமும் கேளுங்க:

இது பற்றி அவர் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு. “ராணா சரியான மாற்று வீரர் என்று எனக்குத் தெரியவில்லை. ஜோஸ் பட்லர் அவுட்டாவதற்கு முன் சப்ஸ்டியூட் வீரர் மீது அதிருப்தியில் இருந்தார். சொல்லப்போனால் பெவிலியின் திரும்பியதும் அதற்காக கோபத்தை வெளிப்படுத்திய அவர் பயிற்சியாளரிடம் பேசினார். ஏனெனில் ராணாவை அவர் சரியான மாற்று வீரராக கருதவில்லை”

இதையும் படிங்க: இந்தியா பைத்தியக்கார முடிவால் ஏமாத்தி இங்கிலாந்தை வீழ்த்திட்டாங்க.. குக், மைக்கேல் வாகன் விமர்சனம்

“இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சிவம் துபேவுக்கு தகுந்த மாற்று வீரராக ஹர்ஷித் ராணா இருப்பார் என்று சொல்ல மாட்டார்கள்” எனக் கூறினார். மொத்தத்தில் என்னங்க பித்தலாட்டமா இருக்கு? என்ற வகையில் இந்தியாவின் முடிவு இருப்பதாக கெவின் பீட்டர்சன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி அலெஸ்டர் குக், மைக்கேல் வாகன் ஆகிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்களும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -