இந்தியா பைத்தியக்கார முடிவால் ஏமாத்தி இங்கிலாந்தை வீழ்த்திட்டாங்க.. குக், மைக்கேல் வாகன் விமர்சனம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டியில் வென்ற இந்தியாவை மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வீழ்த்தியது. இருப்பினும் நான்காவது போட்டியில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே கோப்பையை வென்றுள்ளது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஹர்திக் பாண்டியா, சிவம் துபே தலா 53 ரன்கள் எடுத்த உதவியுடன் 182 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் 19.4 ஓவரில் 166க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

- Advertisement -

அசத்திய ராணா:

முன்னதாக இந்தப் போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய சிவம் துபே அதிரடியாக பேட்டிங் செய்து 53 ரன்கள் எடுத்தார். ஆனால் ஜேமி ஓவர்டன் வீசிய கடைசி ஓவரின் 5வது பந்து அவருடைய தலையில் பலமாகப் பட்டது. அதை மருத்துவர் சோதித்து எந்த பிரச்சனையும் இல்லை என்று அறியப்பட்டதால் துபே கடைசி பந்தை எதிர்கொண்டார்.

அந்தப் பந்தில் ரன் அவுட்டான அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலையில் காயத்தை சந்தித்ததால் ஐசிசி விதிமுறைப்படி அவருக்கு இப்போட்டியில் இந்திய அணி நிர்வாகம் விடுப்பு கொடுத்தது. மேலும் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவுக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

குக் விமர்சனம்:

அந்த வாய்ப்பில் 3 விக்கெட்டுகளை எடுத்த ராணா இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் தலையில் அடி வாங்கும் வீரர் பேட்ஸ்மேன் என்றால் பேட்ஸ்மேன், பவுலர் என்றால் பவுலர் என்ற வகையிலேயே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது ஐசிசி விதிமுறையாகும். ஆனால் இந்தியா அதை பின்பற்றாமல் தங்களை ஏமாற்றும் வகையில் பைத்தியக்கார முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: அவரோட கேட்சை விட்டது தான் தப்பா போச்சு.. தோல்விக்கு பின்னர் மனம் நொந்த ஜாஸ் பட்லர் – பேசியது என்ன?

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெரிதாக அடிக்கக்கூடிய பேட்டிங் ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதிலாக பேட்டிங் செய்ய தெரியாமல் அதிகமாக பவுலிங் செய்யக்கூடிய ராணாவை தேர்ந்தெடுத்தது எனக்கு எந்த விதத்திலும் புரியவில்லை. அதை செய்ய அனுமதித்தது முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக எனக்குத் தெரிகிறது. ஆனால் அந்த வாய்ப்பில் அசத்திய இளம் வீரருக்கு நீங்கள் பாராட்டு கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இது பற்றி மைக்கேல் வாகன் ட்விட்டரில். “பகுதி நேரமாக பவுலிங் செய்யக்கூடிய ஒரு பேட்ஸ்மேனுக்கு பதில் எப்படி நீங்கள் முழுநேர பவுலரை தேர்ந்தெடுக்க முடியும்?” என்று விமர்சித்துள்ளார்.

Advertisement