ஒன்டேல வருணை அடிப்போம்.. இந்தியா அதை செய்யலன்னா.. 3 – 2ன்னு இங்கிலாந்து ஜெயிச்சுருக்கும்.. பீட்டர்சன் அதிருப்தி

Kevin Pieterson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. விரைவில் துவங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் அந்தத் தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது.

முன்னதாக புனே நகரில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட சிவம் துபே ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அப்போது அவரை சோதித்த இந்திய அணியின் மருத்துவர் பெரிய காயம் இல்லாததால் தொடர்ந்து விளையாட அனுமதித்தார். அடுத்த பந்தில் ரன் அவுட்டான துபேவுக்கு பதிலாக இங்கிலாந்து இன்னிங்ஸில் சப்ஸ்டிடியூட் விதிமுறையை பயன்படுத்திய இந்தியா ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது.

- Advertisement -

இந்தியாவின் தவறு:

அந்த வாய்ப்பில் 3 விக்கெட்டுகள் எடுத்த ராணா 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஆனால் ஐசிசி விதிமுறைப்படி ஆல் ரவுண்டர் துபேவுக்கு பதிலாக பவுலர் ராணாவை இந்தியா விளையாட வைத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜோஸ் பட்லர், கெவின் பீட்டர்சன், மைக்கேல் வாகன் போன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் அப்போட்டியில் இந்தியா சப்ஸ்டிடியூட் விதிமுறையை தவறாக பயன்படுத்தாமல் போயிருந்தால் 3 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றிருக்கும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தின் பார்வையில் அது ஏமாற்றமான தொடராக அமைந்தது. அதே சமயம் நான்காவது போட்டியில் சப்ஸ்டிடியூட் விதிமுறை சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கலாம்”

- Advertisement -

வருண் தேர்வு:

“அப்போட்டியில் வென்று 2 – 2 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை சமன் செய்து 5வது போட்டிக்கு வந்திருக்கும். அங்கே இன்னும் வெற்றி பெறுவதற்கு அதிகமாக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை. ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுவார்கள்”

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபி 35% மட்டுமே கிடைச்சாலும்.. பும்ரா விஷயத்தில் இந்தியா 2022 தவறை செய்யக்கூடாது.. ரவி சாஸ்திரி

“ஏனெனில் அவர்கள் நிறைய நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இது பெரிய ஃபார்மட். ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இந்திய அணியை பொறுத்த வரை வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்தது மிகவும் சரியான முடிவு” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூர் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement