விராட் கோலி இந்தியாவை விட்டு லண்டனுக்கு குடி பெயர்கிறாரா? வைரல் புகைப்படம் பற்றி பீட்டர்சன் விளக்கம்

Kevin Pieterson
- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வென்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக உள்ளோம் என்பதைக் காண்பித்துள்ள இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கையின் நட்சத்திரம் விராட் கோலி முதல் போட்டியில் விளையாடாத நிலையில் இரண்டாவது போட்டியில் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். முன்னதாக இந்தியாவுக்காக விளையாடிய நேரம் போக இப்போதெல்லாம் விராட் கோலி தம்முடைய குடும்பத்துடன் லண்டனில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

- Advertisement -

லண்டனுக்கு செல்லும் கோலி:

மேலும் இந்தியாவில் எங்கே சென்றாலும் ரசிகர்கள் அலை மோதுவதால் சாதாரண நபராக வாழ்வதற்காக ஓய்வுக்குப் பின் விராட் கோலி லண்டனுக்கு குடிபெயர உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்தன. அதை அவருடைய பயிற்சியாளர் ராஜ்குமார் சமீபத்தில் உறுதி செய்திருந்தார். அந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுடன் இத்தொடரின் முதல் போட்டியில் நீண்ட நேரம் விராட் கோலி பேசினார்.

அது பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா 2வது போட்டியில் நேரலை வர்ணனையில் பீட்டர்சனிடம் கேட்டது பின்வருமாறு. “இப்போதெல்லாம் விராட் கோலி வெளிநாட்டில் பெரும்பாலான நேரங்களில் இருக்கிறார். எனவே கெவின் பீட்டர்சனிடம் அவர் லண்டனில் ரியல் எஸ்டேட் மற்றும் உள்ளூர் நிலங்களின் விலை நிலவரங்களைக் கேட்டிருக்கலாம்” எனக் கூறினார்.

- Advertisement -

பீட்டர்சன் உறுதி:

அதாவது லண்டனில் வீடு விலை நிலவரங்களை உங்களிடம் விராட் கோலி கேட்டாரா? என்று பீட்டர்சனிடம் அவர் கேட்டார். அதற்கு பீட்டர்சன் ஆம் என்று மறைமுகமாகத் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்களாக ஊகங்களை உருவாக்காதீர்கள். விஷயங்களை ஒருபோதும் யூகிக்காதீர்கள். அனுமானங்களைப் பற்றிய ஒற்றுமையை என்னால் பயன்படுத்த முடியும். ஆனால் நான் இங்கே பயன்படுத்த மாட்டேன்”

இதையும் படிங்க: 33வது சதம் லோடிங் ஆகுது.. ரோஹித் சர்மா இதை செய்யாம விடமாட்டாரு.. சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

“அதே சமயம் நீங்கள் அதிகம் தவறாக சொல்லவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்த சந்திப்பில் நீங்கள் ஃகோல்ப் விளையாட்டை விளையாடத் துவங்க வேண்டும் என்று விராட் கோலியிடம் சொன்னேன்” எனக் கூறினார். அதாவது விராட் கோலி லண்டனில் நிலத்தின் விலை நிலவரங்களைக் கேட்டதாக பீட்டர்சன் தெரிவித்தார். அதனால் வருங்காலங்களில் விராட் கோலி லண்டனுக்கு குடிபெயர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement