ராஜஸ்தான் அணி தோல்வியிலிருந்து தப்பிக்கணுனா இதை செய்தே ஆக வேண்டும் – பீட்டர்சன் கருத்து

Pieterson-1
- Advertisement -

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது மற்ற மூன்று போட்டிகளிலும் மிக மோசமாக விளையாடிய தோல்வி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் விளையாடிய பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை 16.3 ஓவரில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

tewatia

- Advertisement -

புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் என் ஆர் ஆர் -1.011 ஆக உள்ளது. எஞ்சியுள்ள 10 போட்டிகளில் அந்த அணி கட்டாயமாக 6 அல்லது 7 போட்டிகளில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் அப்படி நடந்தால் மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குறித்து பேசியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்பொழுது ஆர்ச்சர் காயம் காரணமாக விளையாடவில்லை. மறுபக்கம் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். பயோ பப்பிள் காரணமாக லியம் லிவிங்ஸ்டன் இங்கிலாந்துக்குச் சென்று விட்டார்.தற்போது அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். எனவே அந்த அணி மற்ற அணிகளில் உள்ள வேறு வெளிநாட்டு வீரர்களை டிரேடிங் முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமாக இருந்தால் இதை உடனடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்தாக வேண்டுமென்று கூறியுள்ளார்

csk vs rr

அணியின் தொடர் தோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் சஞ்சு சாம்சன், ஒரு சில நேரங்களில் நாங்கள் மிக தவறான விளையாட்டை மேற்கொண்டுள்ளோம். இது சம்பந்தமாக நாங்கள் கலந்தாலோசித்து இதற்கான திட்டங்களை வெகுவிரைவில் உள்ளோம். எங்கள் அணியில் ஒரு சில மாற்றங்களை நாங்கள் செய்ய இருக்கிறோம். கண்டிப்பாக இனி வரும் போட்டிகளில் நாங்கள் எங்களது சிறந்த பங்களிப்பை கொடுத்து பழைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போல் விளையாடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Buttler

நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement