ஒரு இளம் வீரரின் கேரியரை இப்படியா கெடுப்பீங்க? இங்கிலாந்தை விளாசும் கெவின் பீட்டர்சன் – டிம் பைன், காரணம் இதோ

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலகலமாக நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் பெரிய சவாலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2017க்குப்பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடிப்படையாக மாறி 2019 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் ஐசிசியின் முட்டாள்தனமான விதிமுறையால் வென்ற இங்கிலாந்து இம்முறை அதை தக்க வைப்பதற்காக இந்தியாவுக்கு வருகிறது.

Ben-Stokes

- Advertisement -

இருப்பினும் 2019 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்வதற்கு மாபெரும் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் கடந்த வருடமே ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றார். அதனால் இம்முறை இங்கிலாந்துக்கு பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ஜோஸ் பட்லரின் கோரிக்கையைத் ஏற்ற பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் பெற்ற ஓய்வு முடிவை வாபஸ் பெற்று இந்த உலக கோப்பையில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

பீட்டர்சன் விமர்சனம்:
இருப்பினும் அதற்காக அறிவிக்கப்பட்ட உத்தேச உலகக்கோப்பை அணியில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்ட இளம் வீரர் ஹரி ப்ரூக் பரிதாபமாக கழற்றி விடப்பட்டுள்ளது சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 3 வகையான கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக தம்மை அடையாளப்படுத்தினார். அதனால் வரும் காலங்களில் இந்தியாவின் விராட் கோலி போல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்று இதே பென் ஸ்டோக்ஸ் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட ஹரி ப்ரூக் 2023 உலகக் கோப்பையில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் வருகிறார் என்பதற்காக சமீப காலங்களில் வாய்ப்பளித்து வளர்க்கப்பட்ட ஹரி ப்ரூக் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் 12 மாதங்களாக வாய்ப்பளித்து வளர்க்கப்பட்டு வந்த ஹரி ப்ரூக்கை கடைசி நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் வருகிறார் என்பதற்காக இங்கிலாந்து நியாயமின்றி கழற்றி விட்டுள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பென் ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்து வெளியே வருவது எனக்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக இது “நான் நான் நான்” என்பது போல் இருக்கிறதல்லவா? அதாவது இது நான் விரும்பும் நேரத்தில் நான் விரும்பும் சமயத்தில் ஐசிசி போன்ற பெரிய தொடரில் விளையாடுவதை நான் தேர்ந்தெடுப்பேன் என்பது போல் இருக்கிறது. அதன் காரணமாக 12 மாதங்களாக தொடர்ந்து விளையாடி வந்த ஒருவரிடம் நீங்கள் “இப்போது நான் விளையாட வருகிறேன். அதனால் மன்னித்து விட்டு தயவு செய்து நீங்கள் பெஞ்சில் அமர்கிறீர்களா” என்று சொல்வது போல் இருக்கிறது” என விமர்சித்தார்.

Kevin

அதாவது ஒரு நட்சத்திர வீரர் இஷ்டத்திற்கு விளையாடுவேன் என்று சொல்வதற்காக உலகக்கோப்பையில் விளையாடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த இளம் வீரரின் கேரியரை கெடுக்கும் வகையில் இங்கிலாந்து நடந்து கொள்வதாக டிம் பைஃன் விமர்சித்துள்ளார். அதை விட இங்கிலாந்துக்காக விளையாடிய முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சனும் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:சச்சினுக்கும் இதே பிரச்சனை இருந்துச்சு, அதை ஃபாலோ பண்ணா விராட் கோலியால் 2023 உ.கோ ஜெயிக்க முடியும் – கிரேக் சேப்பல் அட்வைஸ்

“இங்கிலாந்து அணியில் மிகவும் தூய்மையான திறமை வாய்ந்த ப்ரூக் இடம் பெற முடியவில்லை என்பதை நினைத்து நான் முற்றிலும் திகைக்கிறேன். என்னால் அதை நம்ப முடியவில்லை. 2 வருடங்களுக்கு முன்பாக ஹெண்டிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஹண்டர்ட் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் சூப்பர்ஸ்டாராக வருவார் என்று நான் உடனடியாக சொன்னேன். குறிப்பாக ஒரே பந்தை மிட் விக்கெட் அல்லது எக்ஸ்ட்ரா கவர் திசை உட்பட 360 டிகிரியிலும் அடிக்கும் திறமை கொண்ட அவரை நான் அன்று பார்த்தேன்” என கூறினார்.

Advertisement