மீண்டும் சாம்பியன் ஆகணும்னா இதை பர்ஸ்ட் பண்ணுங்க. மும்பை அணிக்கு ஆலோசனை – கெவின் பீட்டர்சன்

Pietersen
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எஞ்சியுள்ள தொடரானது நாளை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

CSKvsMI

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்த பல்வேறு கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த தொடரில் மும்பை அணி செயல்பட வேண்டிய விதம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் அனைவரும் வெற்றி பெறவே அனைவரும் விரும்புவர்.

மும்பை இந்தியன்ஸ் எப்பொழுதுமே துவக்கத்தில் மெதுவாக ஆரம்பித்து பின்னர் இறுதிநேரத்தில் வெற்றிகளை குவித்து புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் இம்முறை அவர்கள் அந்த தவறை செய்யக்கூடாது. ஏனெனில் ஏற்கனவே பாதி தொடர் முடிந்து விட்டது. எனவே சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருந்தே அவர்கள் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.

எனவே இன்னும் 3-4 போட்டிகளில் தோற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு நழுவி விடும். எனவே இரண்டாம் பாதியில் துவக்கத்தில் இருந்தே வெற்றிகளை பெற ஆரம்பிக்க வேண்டும். இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல தகுதியான அணியாக இருக்கிறது.

ஆகையால் சென்னை அணிக்கெதிரான முதல் போட்டியிலிருந்தே மும்பை அணி ஆதிக்கத்தை செலுத்தினால் மட்டுமே இந்த ஐபிஎல் தொடரை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement