ஐ.பி.எல் தொடரை எந்த நாட்டில் நடத்துனா சரியான இருக்கும் ? – கெவின் பீட்டர்சன் அளித்த பதில்

Pietersen
- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 14வது சீசன், தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுக்கு இடையேயும் கொரானா பரவியதையடுத்து, அத்தொடரானது சில நாட்களுக்கு முன் காலவரையின்றி ஒத்தி வைப்படுவதாக அறிவித்தது பிசிசிஐ. இப்படி நடப்பு ஐபில் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு ரூபாய் 2500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளை செப்டம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறது பிசிசிஐ.

IPL

- Advertisement -

அப்படி மீதமிருக்கும் போட்டிகளை நடத்துவதாக இருந்தால், தொடரை சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்த ஐக்கிய அமீரகத்திலேயே நடத்தலாம் என பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், ஐபிஎல்லில் மீதமிருக்கும் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்தால், அப்போட்டிகளை நடத்த இங்கிலாந்தே சிறந்த இடமாக இருக்குமென்று கருத்து தெரிவித்திருக்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன். இதுகுறித்து பேசிய அவர்,

எல்லோரும் பாதியில் நின்று போன ஐபிஎல் தொடரின் மீதமிருக்கும் போட்டிகளை நடத்துவதற்கு ஐக்கிய அமீரகமே சிறந்த இடமாக இருக்கும் என்று கருத்து கூறி வருகின்றனர். ஆனால் என்னுடைய பார்வையில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு சிறந்த இடமாக இங்கிலாந்து இருக்கும் என்றுதான் கூறுவேன். ஏனெனில் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் பலரும் இங்கிலாந்தில் தான் இருப்பார்கள்.

Ground

மேலும் டி20 உலகக் கோப்பைக்கும் செப்டம்பர் மாத இறுதிக்கும் குறகிய கால இடைவெளியே இருப்பதால் இங்கிலாந்தை தேர்ந்தெடுப்பதே சிறந்த முடிவாக இருக்குமென்று நான் கருதுகிறேன். மேலும் கூறிய அவர், செப்டம்பர் மாத இறுதியில் இங்கிலாந்தின் தட்ப வெப்ப சூழ் நிலையும் மிகச் சிறந்ததாக இருக்கும். மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு லார்ட்சில் இரண்டு மைதானமும், மான்செஸ்டர், லீட்ஸ், பர்மிங்காம் ஆகிய மைதானங்களும் தயாராக இருக்கின்றன.

- Advertisement -

இங்கு போட்டிகளை நடத்தினால், அதைக் காண மக்களும் நேரில் வருவார்கள். எனவே ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அமீரகம், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் நடத்துவதைவிட இங்கிலாந்தில் நடத்துவதே சிறந்ததாக இருக்குமென்று அவர் கூறினார்.

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவித்த அடுத்த சில தினங்களிலேயே, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் அணிகள் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த விருப்பம் தெரிவித்தது. இதற்கிடையில் நேற்று இலங்கை கிரிக்கெட் வாரியமும் மீதமிருக்கும் போட்டிகளை இலங்கையில் நடத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த முடிவையும் பிசிசிஐ இதுவரை எடுக்கவில்லை.

Advertisement