இவர்கள் இருக்கும் ஆர்வத்திற்காகவாது கடவுள் காப்பாற்ற வேண்டும். ஐ.பி.எல் தொடர் நடக்கனும் – பீட்டர்சன் பிராத்தனை

Pieterson-1
- Advertisement -

ஐ.பி.எல் ஆண்டுதோறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் கடந்த 29ம் தேதி துவங்க இருந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தொடர் வரும் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

மேலும் இதே நிலைமை தொடர்ந்தால் இந்த வருட ஐ.பி.எல் தொடரை ரத்து செய்யவும் அதிக வாய்ப்புள்ளது என்று பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ வெளியிட்ட தகவலின்படி நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். நிலைமைக்கு ஏற்றவாறு இந்த தொடரின் முடிவு அமையும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் முன்னாள் வீரரான பீட்டர்சன் ஐபிஎல் தொடர் குறித்து பேசுகையில் : இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள்.

மேலும் இந்த தொடரை காண்பதற்காக ரசிகர்களும் ஆர்வமாக உள்ளதால் இந்த தொடரை நிச்சயம் நடத்தியாக வேண்டும் மேலும் ஜூலை, ஆகஸ்டு என நாம் மாதங்களை முன்பே கணிப்பதை நிறுத்திவிட்டு நிலைமை சரியாகும் வரை நிலைமையின் தீவிரத்தை நாம் நிச்சயம் உற்று நோக்க வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு நிலைமை சரியாகி ஐபிஎல் தொடர் நடந்தால் அதுவே கிரிக்கெட் போட்டிகள் துவங்க சரியான ஆரம்பமாக சரியான காலமாக அமையும். அதுமட்டுமின்றி இந்தியாவில் பாதுகாப்பு கருதி மூன்று அல்லது நான்கு மைதானங்களை தேர்வு செய்து மூன்று வாரங்கள் அல்லது நான்கு வாரங்கள் போட்டிகளின் எண்ணிக்கை சற்று குறைத்து நடத்தினாலும் போதும்.

CskvsMi

அவ்வாறு நடைபெற்றாலும் இந்த தொடர் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். மேலும் வருமானத்தை ஈட்டும் அளவிற்கு போதுமானதாக இருக்கும் என்பதனால் இந்த தொடர் நடக்கும் என்றே நான் கருதுகிறேன் என்று பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement