ஜோ ரூட்டை தவிர வேற எந்த இங்கிலாந்து வீரருக்கும் அதை சொல்லும் தகுதி இல்ல – கெவின் பீட்டர்சன் காட்டம்

Kevin Pieterson 3
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு நான்கு (1-4) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முழுமையாக தவறவிட்டது. இப்படி அடுத்தடுத்த தோல்விகள் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோ ரூட்டை தவிர வேற யாருக்கும் தகுதி இல்ல :

சாம்பியன்ஸ் டிராபி தொடரானது இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கும் வேளையில் இப்படி இந்த சுற்றுப்பயணத்தில் முழுவதுமாகவே ஏழுக்கு ஒன்று (7-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி படுமாசமாக தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அவர்களது நம்பிக்கையையும் குலைக்கும் விதமாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரின் போது இங்கிலாந்து அணி ஒரே ஒரு பயிற்சி செஷனில் மட்டும்தான் விளையாடியதாகவும் அதன் பிறகு எவ்வித பயிற்சியிலும் ஈடுபடவில்லை என்ற செய்தி அறிந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்தியா போன்ற ஒரு ஆசிய கண்டத்திற்கு வந்து பயிற்சியில் ஈடுபடாமல் நேரடியாக போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைத்தால் எப்படி வெற்றி பெற முடியும். குறைந்தது இங்கிலாந்து அணி ஒரு வாரமாவது பயிற்சி எடுத்திருப்பார்கள் என்று நானும் ரவி சாஸ்திரியும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த தொடர் முழுவதுமே ஒரு செஷன் மட்டும் தான் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

- Advertisement -

அதை தவிர்த்து எந்த பயிற்சியும் செய்யவில்லை. ஜோ ரூட் ஒருவர் மட்டும்தான் வலைப் பயிற்சி மேற்கொண்டு இருந்தார் என்று கேள்விபட்டேன். இங்கிலாந்து அணி வீரர்கள் செய்த இந்த செயல் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. எந்த தொடராக இருந்தாலும் சரி எவ்வித பயிற்சியும் இல்லாமல் எந்த வீரராலும் சிறப்பாக செயல்பட முடியாது. இந்த செய்தியை கேள்விப்பட்டு நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன்.

இதையும் படிங்க: ராணா வேண்டாம்.. தனது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய பிளேயிங் லெவனை வெளியிட்ட பீட்டர்சன் பேட்டி

இந்த தொடர் முடிந்து விமானத்தில் செல்லும் ஒரு வீரருக்கு கூட நம்மால் முடிந்த அனைத்தையும் இந்த தொடரில் செய்தும் தோற்று விட்டோம் என்று கூறும் தகுதி யாருக்கும் கிடையாது. ஜோ ரூட் மட்டுமே அதனை சொல்லிக் கொள்ளலாம் மற்றபடி அந்த தகுதி வேறு யாருக்கும் கிடையாது என பீட்டர்சன் காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement