
2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே 15 பேர் கொண்ட இந்திய அணியில் முக்கிய வீரர்கள் சிலர் நீக்கப்பட்டது குறித்த பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் நிலவி வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் 23 வயதான ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர துவக்க வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 5 போட்டிகளில் 41 ரன்கள் சராசரி உடன் 411 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதுமட்டும் இன்றி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் 559 ரன்கள் குவித்து அசத்தலாக செயல்பட்டிருந்தார்.
அதுமட்டும் இன்றி உள்ளூர் போட்டிகளிலும் அவரது ஆட்டம் பிரமாதமாக இருக்கிறது. ரெட் பால் மற்றும் ஒயிட் பால் என இரண்டிலுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 23 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 723 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 164 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 36 ரன்கள் சராசரி வைத்து சிறப்பாக விளையாடி வரும் அவரை ஆசிய கோப்பை தொடருக்காக தேர்வு செய்யாதது தவறு என்று கிரிக்கெட் நிபுணர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளத்தின் வாயிலாக ஜெய்ஸ்வால் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு உங்களுடைய கருத்து என்ன? என முன்னாள் இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சனுக்கு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள கெவின் பீட்டர்சன் குறிப்பிட்டதாவது :
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரில் ஷிவம் துபேவிற்கு மிகப்பெரிய ரோல் இருக்கு.. ஹின்ட் கொடுத்த – மோர்னே மோர்கல்
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் “யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது ஒரு விசித்திரமான முடிவு” என்றும் “அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆசிய கோப்பை தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் அவர் நிச்சயம் விளையாடிருக்க வேண்டும் என்பதை கெவின் பீட்டர்சன் தனது பதிவின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.