இத்தனை ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில் இவரே சிறந்த பவுலர் – கெவின் பீட்டர்சன் புகழாரம்

Kevin
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் முடிந்த பின்னரே இயல்பு நிலைமைக்கு வரும் அவ்வாறு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் அல்லது விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஓய்வு நேரத்தை சமூக வலைதளங்களில் தங்களது ரசிகர்கள் உடன் உரையாடுதல் மற்றும் அவர்களது அனுபவங்களை பகிர்தல் போன்றவற்றை செய்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் என பலரும் கடந்த காலங்களில் கிரிக்கெட்டில் நடந்த சில நிகழ்வுகள் மற்றும் சிறந்த தருணங்கள் பற்றி பேசி வருகின்றனர்.

Kohli

இதனை மையமாக வைத்து ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழுவை கொண்டு ஐபிஎல் வரலாற்றில் சிறந்த அணி, சிறந்த வீரர்கள், சிறந்த கேப்டன், சிறந்த பேட்ஸ்மேன் என்று பல பிரிவுகளாக சிறந்த வீரர்களை தேர்வு செய்தது.
இதில் லசித் மலிங்கா தான் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இதே பதிலைத்தான் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. அவர் தொடர்ச்சியாக வீசிய அனைத்துவிதமான சிறப்பான பந்துகளையும் நாம் பார்த்திருப்போம். நான் சுனில் நரைனைதான் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அவரால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்த முடியும். மேலும், அவரது பந்து வீச்சு குறித்து விமர்சனமும் எழுந்தது.

இதன் காரணமாகத்தான் மலிகாவை தேர்வு செய்தேன் என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன். மேலும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக ஒரே அணியில் தொடர்ந்து டெத் ஓவர்களில் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement