RR vs LSG : முதல் ஓவரிலேயே முரட்டு தடவல், ரசிகர்கள் சார்பாக நேரலையில் நேரடியாக ராகுலை விமர்சித்த பீட்டர்சன் – நடந்தது என்ன

Kevin Peterson
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தானில் நடைபெற்ற 26வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு எதிராக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் வழக்கம் போல அதிரடியான வேகத்தில் ஸ்விங் செய்து முதல் ஓவரை வீசினார். அதை எதிர்கொண்ட லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பவர் பிளே ஓவரை பயன்படுத்தி கொஞ்சம் கூட அதிரடியாக விளையாட முயற்சிக்காமல் சிங்கிள் எடுப்பதற்கே தடுமாறினார்.

அவரது தடுமாற்றத்தை பயன்படுத்திய ட்ரெண்ட் போல்ட் ஒரு ரன் கூட கொடுக்காமல் 6 பந்துகளையும் அபாரமாக வீசி முதல் ஓவரிலேயே மெய்டன் பதிவு செய்து மிரட்டினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் பொதுவாகவே அதிரடி காட்டக்கூடிய கெய்ல் மேயர்ஸ் வேறு வழியின்றி ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் மெதுவாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். அப்படி இருவருமே அதிரடியாக விளையாடாமல் சற்று மெதுவாகவே விளையாடி 10.4 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

விமர்சித்த பீட்டர்சன்:
ஆனால் ஆரம்ப முதலே சீரான வேகத்தை மட்டுமே வெளிப்படுத்திய ராகுல் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39 (32) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஆயுஷ் படோனி 1 (4) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அந்த நிலையில் வந்த தீபக் ஹூடா 2 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் சற்று நிதானத்துடன் விளையாடிய கெய்ல் மேயர்ஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (42) ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார்.

அதனால் 104/4 என தடுமாறிய லக்னோவை கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் 21 (16) ரன்களும் நிக்கோலஸ் பூரான் 29 (20) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். அதனால் 20 ஓவர்களில் லக்னோ வெறும் 154/7 ரன்கள் மட்டுமே எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். முன்னதாக 2018 வாக்கில் அதிரடியாக செயல்பட்டு இந்திய அணியில் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த கேஎல் ராகுல் இளம் வீரராக இருப்பதால் துணை கேப்டனாக உருவாக்க பிசிசிஐ முடிவெடுத்தது.

- Advertisement -

அந்த நிலையில் 17 கோடி என்ற உச்சத்தை எட்டிய தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சமீப காலங்களாகவே பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் அணியின் தோல்விக்கு காரணமாக அமைவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர். அந்த விமர்சனங்களை நிறுத்த வேண்டிய அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததார்.

அதனால் துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை இழந்த அவர் தற்போது மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். எனவே மீண்டும் இழந்த தன்னுடைய நிலையான இடத்தை பிடிப்பதற்கு இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாட வேண்டிய அவர் கொஞ்சம் கூட முன்னேறாமல் 8 (12), 20 (18), 35 (31), 18 (20), 74 (56) என 155 ரன்களை 113.14 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க:IPL 2023 : ஏற்கனவே அவங்க இருக்குற நிலைமைக்கு இது வேறயா? – டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்

அதனால் ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வரும் நிலையில் இந்த போட்டியில் முதல் ஓவரிலேயே ஒரு ரன் கூட எடுக்காததால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணையாளராக செயல்பட்ட முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கடுப்பாகி மிகவும் அலுப்புத் தட்டுவதாக வெளிப்படையாக விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பவர் பிளே ஓவர்களில் கேஎல் ராகுல் பேட்டிங் செய்வதை பார்ப்பது எனது வாழ்நாளில் நான் பார்க்கும் போரிங் அடிக்கக்கூடிய (அலுப்பு தட்டும்) விஷயமாகும்” என்று கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement