ஓய்வு பெற்ற அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் வைத்திருக்கும் சாதனை என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Kevin-o-brein
- Advertisement -

2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை தனி ஒருவராக துவம்சம் செய்த அயர்லாந்து அணியின் வீரர் ஒருவர் தற்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, கென்யா போன்ற அணிகளில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அதுபோன்ற அணிகளில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் மிகப் பெரும் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக தங்களது திறமையை வெளிக்காட்டும்போதுதான் கிரிக்கெட் ரசிகர்களால் உற்று நோக்கப்படுகிறார்கள்.

kevin

- Advertisement -

அப்படி ஒரு அற்புதமான ஆட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி, உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்தான் அயர்லாந்து அணியைச் சேர்ந்த கெவின் ஓ பிரையன். கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில், கத்துகுட்டி அணியான அயர்லாந்து அணிக்கு 329 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. சேஸிங்கில் ஐந்து விக்கெட்டுகள் இழந்த பின்னர், ஆறாவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்த கெவின் ஓ பிரையன், இங்கிலாந்து அணியின் முன்னனி பௌலர்களான ஆண்டர்சன், ப்ராடு, ஜேம்ஸ் ஸ்வான் ஆகியோரின் பந்துகளை பாரபட்சம் பார்க்காமல் பவுண்டரிகளுக்கு அடித்திருந்தார்.

அந்த போட்டியில் 50 பந்துகளில் சதமடித்த அவர், அயர்லாந்து அணி வெற்றி பெறவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஒரு நாள் உலக கோப்பை தொடர்களில் 50 பந்துதுகளில் அவரடித்த சதம்தான், அயர்லாந்து அணி சார்பாக இதுவரை அதிவேக சதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கெவின் ஓ பிரையன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

kevin 1

ஒரு நாள் போட்டிகளை நான் அதிகமாக விரும்பினாலும், நீண்ட காலத்திற்கு என்னால் அதில் விளையாட முடியாது. எனவே அதிலிருந்து ஓய்வு பெற இதுதான் சரியான தருணம் என்று கூறிய அவர், அடுத்து வரும் இரண்டு டி20 உலக கோப்பை தொடர்களில் விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.

kevin 2

15 ஆண்டுகளாக அயர்லாந்து அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 37 வயதான கெவின் ஓ பிரையன், 2006 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான அயர்லாந்து அணியில் அறிமுகமாகி இருக்கிறார். இதுவரை அந்த அணிக்காக 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் 3619 ரன்களை குவித்திருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், 114 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement