IND vs RSA : இந்த அற்புதமான டூர்ல கடைசில இப்படியா நடக்கனும்? ஏமாற்றைத்தை பகிர்ந்த – தெ.ஆ கேப்டன்

Keshav-Maharaj
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று சமநிலையில் இருந்த வேளையில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

நேற்றைய போட்டி மழை காரணமாக சிறிது நேரம் தடைபட்டு 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் இந்திய அணியார்னது 3.3 ஓவர்களில் 28 ரன்கள் குவித்து 2 விக்கெட்டுகளை இழந்த வேளையில் மீண்டும் மழை பெய்தது. அதோடு தொடர்ந்து மழை விடாமல் பெய்ததால் இரவு 9.45 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இரு அணிகளுமே இந்த தொடரின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா காயம் காரணமாக விளையாடாததால் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட மகாராஜ் இந்திய அணியுடனான இந்து சுற்றுப்பயணம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

இதுகுறித்து அவர் கூறுகையில் : அருமையான இந்த தொடரில் கடைசி போட்டி முழுவதுமாக நடக்காமல் போனது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த போட்டியை நாங்கள் மிகச்சிறப்பாக துவங்கியிருந்தோம். இருந்தாலும் மழை பெய்வதை யாராலும் நிறுத்த முடியாது. இந்த தொடரில் நாங்கள் சில முக்கிய மாற்றங்களை செய்து அணியை வலுப்படுத்தினோம்.

- Advertisement -

எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்காக இன்னும் சில மாற்றங்களை நாங்கள் அணிக்குள் கொண்டுவந்து மேலும் பலப்படுத்த விரும்புகிறோம். இந்திய அணிக்கு எதிராக இனிவரும் தொடர்களில் நாங்கள் இதேபோன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இதையும் படிங்க : IND vs RSA : ராசியே இல்லாத கேப்டன் வரிசையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் – மோசமான சாதனை

கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளாக நாங்கள் வெற்றி பெறாதது சற்று ஏமாற்றத்தை அளித்தாலும் இனி அடுத்தடுத்து வரும் தொடர்களில் எங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தி தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்க விரும்புகிறோம் என கேஷவ் மகாராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement